(2826)

(2826)

அடல்கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன் றாரணச்சொல்

கடல்கொண்ட ஒண்பொருள் கண்டளிப்பப்,பின்னும் காசினியோர்

இடரின்கண் வீழ்ந்திடத் தானுமவ் வொண்பொருள் கொண்டவர்பின்

படரும் குணன், எம்இராமா னுசன்றன் படியிதுவே.

 

பதவுரை

அடல் கொண்ட நேமியன்

(ஆச்ரித விரோதிகளை அழிக்கவல்ல) மிடுக்கையுடைய திருவாழியை எந்தினவனாய்

ஆர் உயிர் நாதன்

ஸ்கல ஆச்மாக்களுக்கும் சேஷியான எம்பெருமான்

அன்று

அர்ஜுனனுக்கு ஸாரதியாயிருந்த வக்காலத்தில்

ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப

வேதங்களாகிற கடலில் மறைந்து கிடந்த நல்ல அர்தங்களை ஆராய்ந்து கீதாமூலமாக) உபதேசிக்க

பின்னும்

அதற்குப் பின்பும்

காசினியோர்

பூமியிலுள்ளவர்கள்

இடரின் கண் வீழ்ந்திட

ஸம்ஸார துக்கத்தில் அழுந்திக் கிடக்க,

தானாம்

(எம்பெருமானாராகிற தாமும்

அ ஒன் பொருள் கொண்டு

(முன்பு ஸர்வேச்வரனருளிச் செய்த) அந்தச் சிறந்த அர்த்தங்களைக் கொண்டு

அவர் பின்படரும் குணன்

அந்த ஸர்ஸாரிகளைப்பின் எம்பெருமானாருடைய

வடி இது

ஸ்வபாவம் இது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  முன்பு பகவான் பல சிறந்த அர்த்தங்களை ஸ்ரீ பகவத் கீதாமுகத்தாலே வெளிப்படுத்தின வளவிலும் பாழும் ஸம்ஸாரிகள் அவ்வர்தங்களைத் தெரிந்துகொண்டு உஜ்ஜீவிக்க மாட்டாமல் மேன்மேலும் ஸம்ஸாரத்தையே பெருக்கிக்கொண்டு அதோகதியை யடைந்துவிடவே, “ஐயோ! இப்படி நிந்ய ஸம் ஸாரிகளாய்க் கெட்டுப்போகிறார்களே!” என்று அநுதாபங்கொண்ட  எம்பெருமானார் அந்த கீதாசாஸ்த் ரத்திலுள்ள பொருள்களையே விளங்க உரைத்துக் கொண்டு, இது கேட்டுத் திருந்துவார் ஆரேணு முண்டோ? என்று ஸம்ஸாரிகளைப் பின்தொடர்ந்து செல்லுகிறார்; நம்மைப் பெறுகற்கு அவர் தாமே முயற்சி செய்துகொண்டு – ஆள்பார்த்து உழிதருகின்றார்;  இந்தக் திருக்குணம் உங்களுக்குப் தெரிய வில்லையா? என்கிறார்.

தானும் அவ்வொண் பொருள் கொண்டு = கீதா பாஷ்யம் அருளிச் செய்து என்று கருத்து திருக்கோட்டியூர்  நம்பி பக்கலிலே சரமச்லோகார்த்தத்தை ஏகாந்தமாகக் கேட்டு அதனை யெல்லாரு மறிந்து உஜ்ஜீவிக்குமாறு கோபுரத்தின் மேலேறி விளம்பரப்படுத்தின திருக்குணத்தை இப்பாட்டில் பேசுகின்றாரென்னவுமாம்.

 

English Translation

Then in the yore, the lord of all souls, wielder of the discus, brought out the hidden meaning of Vedic texts to Arjuna.  Even then, seeing the impatient worldly ones trapped in despair, the lord followed ones trapped in despair, the lord’s followed them with good advice. That is how our Ramanuja came to be!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top