(2811)
நிதியைப் பொழியும் முகில்என்று நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற் றுலகில் துவள்கின்றி லேன், இனித் தூய்நெறிசேர்
எதிகட் கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதிபெற் றுடைய இராமா னுசனென்னைக் காத்தனனே.
பதவுரை
|
தூய் நெறி சேர் |
– |
பரிசுத்தமான அனுட்டானமுடைய யதிகளுக்கு |
|
இறைவன் |
– |
தலைவரான |
|
யமுனைத் துறைவன் |
– |
ஆளவந்தாருடைய |
|
இணை அடி ஆம் கதி |
– |
உபய பாதங்களாகிற ப்ராப்யத்தை |
|
பெற்று |
– |
பெற்று (அதனாலே) |
|
உடைய |
– |
உலகத்தார்க்கெல்லாம் ஸ்வாமியாயிருக்கிற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
|
என்னை காத்தனன் |
– |
என்னைரக்ஷித் தருளினார்; (ஆன பின்பு) |
|
இனி |
– |
இனிமேல், |
|
நிதியை பொழியும் முகில் என்று |
– |
“நிதிகளை வர்ஷிக்கிற மேகமே!” என்று |
|
துதி கற்று |
– |
ஸ்தோத்ரங்களைப் பண்ணிக்கொண்டு |
|
உலகில் |
– |
இவ்வுலகத்தில் |
|
நீசர் தம் |
– |
நீசராயிருப்பவருடைய |
|
வாசல் பற்றி |
– |
வாசலைப்பற்றி நின்று |
|
துவள்கின்றிலேன் |
– |
வருந்தமாட்டேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நேற்றுவரையிலும் நான் கண்டபேர்களுடைய வாசற் கடைகளிலும் போய் நின்று வாயைக்காட்டி வயிற்றைக்காட்டி “மஹாநிதிகளைப் பொழிகின்ற மேகமே!” என்று பொய்யான நரஸ் துதிகளைச் செய்து துவண்டேன்; இன்று முதல் எந்நாளும் இனி நான் அவ்வாறு துவள மாட்டோன்; ஒரு நீசனுடைய வாசலையும் பற்றமாட்டேன். இன்று நான் எம்பெருமானாருடைய ஸம்ரக்ஷணைக்கு ஆளாய்விட்டேன்; அவரோ, எதிரிகளுக்குத் தலைவரான ஆளவந்தாருடைய ஸம்ரக்ஷணையைப் பெற்று உய்ந்தவர்; அனனவராலே ஸம்ரக்ஷிக்கப் பெற்றேனான பின்பு இனிநான் எதுக்காக ஒரு நீசன் வாசலைப் பற்றித் துவளகின்றிலேனினி.
English Translation
Yamunacharya, the king among ascetics of the righteous path, became the preceptor for Ramanuja, our master. Having secured his protection, no more shall I stand and suffer at the door of meanmortals singing their praises as “O, wealth-pouring rain-cloud”.
