(2810)

(2810)

ஆரப் பொழில்தென் குருகைப் பிரான்,அமுதத் திருவாய்

ஈரத் தமிழின் இசையுணர்ந் தோர்கட்கு இனியவர்தம்

சீரைப் பயின்றுய்யும் சீலங்கொள் நாதமுனியை நெஞ்சால்

வாரிப் பருகும் இராமா னுசனென்றன் மாநிதியே.

.

பதவுரை

ஆரம் பொழில்

–

சந்தனச் சோலைகளையுடைய

தென் குருகை

–

அழகிய திருக்குருகூரிலே (அவதரித்த)

பிரான்

–

மஹோபகாரகரான ஆழ்வாருடைய

அமுதம் திருவாய்

–

பரமபோக்யமான திருப்பவளத்தில்பிறந்த

ஈரம் தமிழன் இசை

–

ஈரச்சொல்லாகிய திருவாய்மொழியின்  இசையை

உணர்ந்தோர்கட்கு

–

அறிந்தவர்களுக்கு

இனியவர் தம்

–

இஷ்டராயிருப்பவர்களுடைய

சீரை

–

குணங்களை

பயின்று

–

அப்யஸித்து

உய்யும் சீலம் கொள்

–

ஸத்தை பெறும் சீலத்தையுடையரான

நாதமுனியை

–

நாதமுனிகளை

நெஞ்சால்

–

தம் திருவுள்ளத்தாலே

வாரி பருகும்

–

அபிநிவேசத்தோடு அனாபவிக்கின்ற

இராமாநுசன்

–

எம்பெருமானார்

என் தன் மாநிதி

–

எனக்கு அக்ஷயமான நிதி.

 

English Translation

Nathamuni exulted in worshipping the sweet poet Madurakavi, who knew the art of singing the Rasa-laden words of the delightful Tiruvaimoil be queathed by the lord of flower-groves-surrounded southern kurugur king Satakopan. Ramanuja who filled his heart with love for Nathamuni, is our great wealth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top