(2807)
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம்கண்ண மங்கைநின் றானைக் கலைபரவும்
தனியா னையைத்தண் டமிழ்செய்த நீலன் றனக்குலகில்
இனியானை எங்கள் இராமா னுசனைவந் தெய்தினரே.
பதவுரை
|
கலை பரவும் தனி ஆனையை |
– |
ஸகல சாஸ்த்ரங்களாலும் துதிக்கப்பெற்ற அத்விதீயமான மத்த கஜம் போன்ற |
|
கண்ணமங்கை நின்றானை |
– |
திருக்கண்ண மங்கையிலே நிற்கும் பத்தராவிப்பெருமாளைக் குறித்து |
|
உலகில் |
– |
இவ்வுலகில் |
|
தண் தமிழ் செய்த |
– |
ஸம்ஸார தாபஹாமான திவ்ய ப்ரபந்தத்தைச் செய்தருளின |
|
நீலன் தனக்கு |
– |
திருமங்கையாழ்வார் பக்கல் |
|
இனியானை |
– |
ப்ரேம முடையவராய் |
|
எங்கள் |
– |
எங்களுக்குத் தலைவரான |
|
இராமாநுசனை |
– |
எம்பெருமானாரை |
|
வந்து எய்தினர் |
– |
வந்து பணிந்த மஹான்கள் |
|
துயரங்கள் முந்திலும் முனியார் |
– |
தாபத்ரயம் செறிந்தாலும் வருத்தப்பட மாட்டார்கள் |
|
இன்பங்கள் மொய்த்திடினும் மனம் கனியார் |
– |
ஸுகங்கள் செறிந்தாலும் களிப்படைய மாட்டார்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸகல சாஸ்த்ரப்ரதிபாத்யனான எம்பெருமானைத் தம்முடைய திவ்யப்ரபந்தங்களிலே அமைத்துப் பாடின திருமங்கையாழ்வார்க்கு அந்தரங்க பக்தரான எம்பெருமானாரை ஆச்ரயித்த மஹான்கள் ஸுகதுக்கங்கள் மேலிடுங்காலத்தில் மற்ற ஸம்ஸாரிகளைப்போல் ஹர்ஷ சோகங்களை யடையாமல் எவ்வித விகாரமும் அற்றிருப்பர்கள்; நீங்களும் ஹர்ஷ சோகங்களில் கலங்கவேண்டா என்றபடி கண்ணமங்கை நின்றானை = திருப்பதிகட்கும் புக்குக் கவிபாடின கலியன் என்றபடி. நீலன் = திருமங்கையாழ்வாருடைய திருநாமங்களில் ஒன்று.
English Translation
Tirumangai Alvar, the polific and unique poet Nilan, rendered sweet Tamil songs on the lord of Kannamangai, and other temple towns. Our master Ramanuja was very fond this Alvar. Those who seek refuge in him are neither vexed by misfortune, nor pleased by good fortune.
