(2806)
தாழ்வொன்றில் லாமறை தாழ்ந்து தலமுழுதுங் கலியே
ஆள்கின்ற நாள்வந் தளித்தவன் காண்மின் அரங்கர்மௌலி
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்லருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமா னுசனென்னும் மாமுனியே.
பதவுரை
|
அரங்கர்மௌலி சூழ்கின்ற மாலையை |
– |
ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு முடியிலே சாத்தக் கடவதான பூமாலையை |
|
சூடி கொடுத்தவள் |
– |
தனது திருக்குழலிலே அணிந்து வாஸித மாக்கிக் கொடுத்தவளான ஆண்டாளுடைய |
|
தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் |
– |
அவ்யாஜமான அருளாலே வாழ்பவரும் உதாரருமான |
|
இராமாநுசன் என்னும் மாமுனி |
– |
ஸ்ரீ ராமாநுஜ முனியானவர் (எப்படிப் பட்டவரென்றால்) |
|
தாழ்வு ஒன்று இல்லா மறை |
– |
ஒரு குறையுமில்லாதிருந்த வேதமானது |
|
தாழ்ந்து |
– |
(குத்ருஷ்டிகளாலே)இழிவு பெற |
|
தலம் |
– |
முழுதும் பூமியெங்கும் |
|
கலியே ஆள்கின்ற நாள் |
– |
கலியே ஸாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே |
|
வந்து |
– |
இங்கே வந்தவதரித்து |
|
அளித்தவன் காண்மின் |
– |
(அந்தவேதத்தை உத்தரிப்பித்து உலகத்தை)ரக்ஷித்தருளினவர். |
English Translation
When the faultless Vedas became faulted and the whole world was ruled by kali alone, there came the benevolent Muni Ramanuja, who lived by the grace of Andal, the girl poet who wore on herself a garland and offered it to the Lord of Arangam, who in turn found it worthy of being wrapped on his crown.
