(2805)

(2805)

சோராத காதல் பெருஞ்சுழிப்பால், சொல்லைமாலை யொன்றும்

பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன்தாள்

பேராத வுள்ளத் திராமா னுசன்றன் பிறங்கியசீர்

சாராமனிசரைச் சேரேன் எனக்கென்ன தாழ்வினியே?

 

பதவுரை

சோராத காதல் பெரு சுழிப்பால்

ஒருநாளும் குறைவுபடா தப்ரேமத்தில் பெருஞ்சுழிப் படுகையாலே

தொல்லை மாலை  ஒன்றும் பாராது

நித்யனான எம்பெருமான்  படியைச் சிறிதும் நிரூபியாமல்

அவனை

அவ்வெம்பெருமானை  நோக்கி

பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன்

பல்லாண்டு பல்லாண் டென்றுமங்ளாசாஸநம் பண்ணுகையையே நித்யஸவாவமாகவுடையரான பெரியாழ்வாருடைய

தாள் பேராத உள்ளத்து

திருவடிகள் விட்டகலாத திருவுள்ளத்தை யுடையரான

இராமாநுசன் தன்

எம்பெருமானாருடைய

பிறங்கிய சீர்

மிக்க திருக்குணங்களை

சாரா

தங்களுக்கு அநுபாவ்யமாகக் கொள்ளாத

மனிசரை

மநுஷ்யர்களை

சேரேன்

பற்றமாட்டேன்

இனி

இப்படிப்பட்ட உறுதி பிறந்த பின்பு

எனக்கு என்ன தாழ்வு

அடியேனுக்கு என்னகுறை?.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பாண்டியராஜனுடைய பண்டித சபையில் எழுந்தருளி  “எம்பெருமானே பரதத்தும்” என்று ஸ்தாபநம் செய்து கிழியறுத்துவிட்ட காலத்து, அப்பாண்டியன் தம்மை யானை மேலேற்றி ஊர்வலம் வருவிக்கையில் தம் வைபவத்தைக் காணவந்து ஆகாசத்திலே கருடாரூடனாய் நின்ற திருமாலைச் சேவித்து அப்பெருமானிடத்துள்ள பெருங்காதலாலே ரக்ஷயபூதரான தம்மையம் ரக்ஷகனான் அவனையும் மறந்து, தம்மை ரக்ஷகராகவும் அவனை ரக்ஷ்யனாகவு மெண்ணி அவனுக்குப் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்” டென்று தொடங்கி மங்களாசாஸநம் செய்தருளின பெரியாழ்வாருடைய திருவடிகளையே அநவரதம் தியானித்தருளும் எம்பெருமானாருடைய குணங்களைச் சிந்திக்ககில்லாத மனிசரோடு நான்ஸஹவாஸம் செய்ய மாட்டேண்; இந்நினைவு பிறந்தபின் இனி எனக்கு ஒரு குறையுமில்லை – என்றாராயிற்று.

முன்னிரண்டடிகளிற் குறிக்கப்பட்டுள்ள சரிதையின் விரிவு பெரியாழ்வார் வைபவத்திற் காணத்தக்கது

 

English Translation

Bathed in a foundation of love, Periyalvar sang for the Lord, the Pallandu, “Glory be” Song, brimming with ever-flowing love, heedless of everything else. Ramanuja always bears him in his heart.  I shall not find company in lowly men who do not see the greatness of Ramanuja.  Now I shall not want.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top