(2804)

(2804)

கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்

கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன்சொல்

பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே

துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.

 

பதவுரை

கொல்லி காவலன்

குலசேகரப் பெருமாளாலே அருளிச் செய்யப்பட்டதாய்

கலை சொல் பதிக்கும்

சாஸ்திரச் சொற்கள் அமையப் பெற்றதான பொருமாள் திருமொழிப் பரசுரங்களை

பாடும் பெரியவர்

பாடுகின்ற பெரியோர்களது

பாதங்களே

திருவடிகளையே

துதிக்கும்

ஸ்தோத்ரம் செய்பவராய்

பரமன்

உத்க்ருஷ்டரான

இராமானுசன்

எம்பெருமானார்

என்னை சோர்விலன்

என்னைவிட்டு நீங்குகிறாரில்லை; (ஆதலால்) ப்ராப்ப லாபந்துக்காக வரைந்து

கதிக்கு பதரி

அத்யுஷ்ணமான காடுகளிலும் மலைகளிலும்

கடலும்

கடல்களிலும் (நின்றுகொண்டு)

எல்லாம் கொதிக்க

எல்லா அவயங்களும்

தவம் செய்யும் கொள்கை

தபஸ்ஸூ பண்ணும் ஸ்வபாவத்தை

அற்றேன்

விட்டொழித்தேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸகல சாஸ்த்ரங்களின் ஸாரப்பொருள்களையும் திரட்டி ஸ்ரீ குலசேகரப்பெருமான் அருளிச்செய்த பெருமாள் திருமொழி யென்னாந் திவ்யப்ரபந்தத்தை அநுஸந்திக்கின்ற பெரியவர்களது திருவடிகளையே போற்று மியல்வினரான எம்பெருமானார் வந்து தாமே என்னை ஸ்வீகரித்தாராதலால் இனி ஒரு நாளும் அவர் அடியேனைக் கைவிடமாட்டார்; ஆனபின்பு நமக்கு ப்ராப்யம்வேறு ஒன்று மில்லாமையாதே, வநபர்வத ஸமுத்ர தீரங்களில் நின்று க்ரூரமாகச் செய்யும் தவங்களில் இனி எனக்கு அர்வய மில்லை யென்றாராயிற்று.

“எல்லாங் கொதிக்கத் தவஞ்செய்யுங் கொள்கை” என்றதற்கு – இவனுடைய தவத்தின் கொடுமையைக் கண்டு கானமும் கல்லும் கடலும் பரிதபிக்கும்படியாக அந்தந்த ஸ்தலங்களிலே நின்று தபஸ்ஸூ பண்ணும் ஸ்வபாவம் என்று பொருள் கூறுவாருமுளர்.

சோர்வு இலன் – பிரிவிலன் என்றபடி.

 

English Translation

Kulasekara Alvar, the king of kolli sang with words of artistic majesty. Ramanuja praises the great ones who always sing the Alvar’s works. Giving up the severe paths of penance, -standing in the sizzling forest, mountain and ocean for the sake of redemption, -I have found my refuge in Ramanuja. He shall never let me down.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top