(2803)
செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே.
பதவுரை
|
செய்யும் |
– |
(தொண்டரடிப்பொடியாழ்வாராகிற தம்மாலே) செய்யப்பட்ட தாய் |
|
பசும் துளவம் |
– |
பசுமை தங்கிய திருத்துழாய் மயமாய் |
|
தொழில் |
– |
வேலைப்பாடுகளையுடைத்தான |
|
மாலையும் |
– |
பூமாலைகளையும் |
|
செம் தமிழில் |
– |
அழகிய தமிழ்ப் பாஷையிலே |
|
பெய்யும் |
– |
உண்டாகப் பட்டதாய் |
|
மறை |
– |
வேதஸத்ருசமான |
|
தமிழ் மாலையும் |
– |
திருமாலை திருப்பள்ளியெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகிற சொல் மாலைகளையும் |
|
பேராத சீர் அரங்ககத்து ஐயன்கழற்கு அணியும் |
– |
நித்யஸித்தமான கல்யாணகுணங்களையுடையரான ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளிலே சாத்தினவமான |
|
பரண் |
– |
தொண்டரடிப்பொடியாழ்வாராகிறபெரியவருடைய |
|
தாள் அன்றி ஆதரியா |
– |
திருவடிகளைத் தவிர மற்றொன்றையும் விரும்பாத |
|
மெய்யன் |
– |
ஸத்யசீலரான |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
|
சரணே |
– |
திருவடிகளே |
|
எனக்கு |
– |
அடியேனுக்கு |
|
வேறு கதி |
– |
விலக்ஷணமான ப்ராப்ய வஸ்துவாம், |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளை யன்றி மற்றொன்றில் ஆதரம் அற்றிருக்கிற எம்பெருமானார் திருவடிகளே நமக்குச் சரணமென்கிறார் இதில்
தொண்டரடிப்பொடியாழ்வார் ஸ்ரீரங்கநாதன் திருவடிகளில் இரண்டு மாலைகளைச் செய்து ஸமர்ப்பித்தனரென்று சாடூக்தியாகச் சொல்லுகிறார் அமுதனார். ‘துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி” என்றும்’ “தொடையொத்த துளபமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றும் தாமே அருளிச் செய்தபடிக்குப் பொருந்தத் திருத்துழாய் மாலைகளையும், திருமாலை திருப்பள்ளியெழுச்சி யென்கிற திவ்ய ப்ரபந்தங்களாகியற சொல்மாலைகளையும் அரங்கத்தையன் கழல்களிலே ஸமர்ப்பித்தவரீறே தொண்டரடிப்பொடியாழ்வார்.
“துளபத்தொழில் மாலையும்” என்றும் சிலர் பாடங்கூறுவர்; துளபத்து – துளஸியினாலாகிய, எழில் மாலை – அழகிய என்றபடி. இப்பாடல் அழகிய தேயாயினாம் வியாக்கியானத்தில் ஆதரிக்கப்பட்ட பாடமன்றாதலால் உபேக்ஷிக்கத் தக்கதென்க.
English Translation
Tondaradippodi Alvar made a fragrant garland of Tamil songs of Vedic wisdom and a fresh verdant garland of woven Tulasi leaves worthy of being placed at the feet of the Lord or Arangam. The truthful Ramanjua worshipped the Alvar alone. Ramanjua’s feet are my sole refuge.
