(2794)

(2794)

என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த

முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே

பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்

சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.

 

பதவுரை

ஊழி முதல்வனையே

–

காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரணபூதனான எம் பெருமானையே

பன்ன

–

(எல்லாரும் விவேகித்து) அநுஸந்திக்கும்படி

பணித்த

–

(ஸ்ரீபாஷ்யமுகத்தாலே) அருளிச்செய்த

பரன் இராமாநுசன்

–

ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார்

புவியில்

–

இந்தப்பூமியிலே

என்னை ஒரு பொருள் ஆக்கி

–

(அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி

மருள் சுரந்த முன்னை பழைவினை வேர் அறுத்து

–

அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரறநீக்கி

பாதமும்

–

தமது திருவடிகளையும்

என் சென்னி

–

எனது தலையிலே

தரிக்க வைத்தான்

–

நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவுமஹாப்ரஸாதம் பெற்றோனான பின்பு)

எனக்கு

–

அடியேனுக்கு

எதும் சிதைவு இல்லை

–

எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு ஆளான நான் இனி ஒருநாளும் எவ்விதமான ஹாநியையும் அடைமாட்டேன் என்கிறார், பதார்த்தகோடியில் சேராமல் துச்சனாயிருந்த எனது கருமங்களையெல்லாம் வேரற நீக்கி, தமது பாதாரவிந்தங்களையும் என் தலைமேலே வைத்தருளினார் எம்பெருமானார்; இப்பேறு பெற்ற எனக்கு  இனி ஒரு குறையுமில்லை என்றாராயிற்று.

மருள் சுரந்த – அஜ்ஞாந்த்தாலே செய்யப்பட்ட என்கை; மருளாலே சுரக்கப்பட்ட என்றவாறு. (ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த) ஊழிமுதல்வனான எம்பெருமானையே பரவும்படி அமுதனாராகிய தம்மைச்செய்தருளின – என்று அர்த்தமல்ல; பகவத்விமுகரா யிருந்தவர்களை யெல்லாம் உபதேசாதி முகத்தாலே பகவத் ப்ரவணராம்படி செய்தருளினவர் என்று பொதுப்படையாகச் சொன்னபடி. ஊழிமுதல்வன் – பிரளயகாலத்தில் முழுமுதற் கடவுளாயிருந்தவன் என்றுமாம்.

 

English Translation

Our lord Ramanjua, who exhorted all to worship the first-Lord alone, made a person out of me in this world.  He destroyed by the root the darkness my age-old Karmas, and gave me his feet to wear on my head, I have nothing to fear.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top