(2793)

(2793)

பேரியல்நெஞ்சே! அடிபணிந் தேனுன்னைப் பேய்ப்பிறவிப்

பூரிய ரோடுள்ள சுற்றம் புலத்திப் பொருவருஞ்சீர்

ஆரியன் செம்மை இராமா னுசமுனிக் கன்புசெய்யும்

சீரிய பேறுடை யார் அடிக் கீழென்னைச் சேர்த்ததற்கே.

 

பதவுரை

பேர்இயல் நெஞ்சே!

மிகவும் கம்பீரமான மனமே!

உன்னை அடிபணிந்தேன்

உன்னை வணங்குகின்றேன்; (எதற்காக என்னில்;

பேய் பிறவி

ஆஸுரப் பிறப்பையுடையவர்களான

பூரியரோடு உள்ள சுற்றம்

நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை

புலர்த்தி

போக்கடித்து

பொருவு அரு சீர்

ஒப்பற்ற குணங்களையுடையவரும்

ஆரியன்

சிறந்த அநுஷ்டாக முடையவரும்

செம்மை

(ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரீமாறுந்தன்மை வாய்ந்தவருமான

இராமாநுச முனிக்கு

எம்பெருமானார்திறத்தில் அன்பு செய்யும் சீரிய பேறு

உடையார்

பக்தி பண்ணுவதையே  பரம புருஷார்க்தமாகவுடையவர்களான  கூரத்தாழ்வான் போல்வாருடைய

அடிக்கீழ்

திருவடிகளின் கீழே

என்னை

(பரம நீசனாயிருந்த) என்னை

சேர்த்ததற்கே

கொண்டுசேர்த்த மஹோபகாரத்திற் காகவே (உன்னை அடி பணிந்தேன்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  பரம நீசர்களோடு எனக்கிருந்த ஸம்ஸர்க்கத்தைப் போக்கடித்து, ஒப்பற்ற குணசாலியான எம் பெருமானாருடைய திருவடிகளின் ப்ராவண்யமாகிற பரமபுருஷார்த்தத்தைப் பெற்றுள்ள ஆழ்வான் போல்வாருடைய திருவடிகளின் கீழே என்னைக் கொண்டு சேர்த்த நெஞ்சே! இப்பெருநன்றி புரிந்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? “தலையல்லால் கைம்மாறிலேனே” என்றாற் போல உன்னைத் தலையால் வணங்குவதுதவிர வேறோரு கைம்மாறு நான் செய்யகில்லேன் என்றாராயிற்று. பூரியர் = இழிபிறப்பாளர். புலர்த்துதல் – உலாச்செய்தல்; அதாவது போக்கடித்தல்; பொருவு – ஒப்பு.

“ இராமாநுசனடிக் கன்புசெய்யுஞ் சீரிய பேறுடையார்” என்றவிடத்து =ராமாநுஜ பக்தர்களெல்லாரையும் விவக்ஷிக்கிறார். என்றலும், கூரத்தாழ்வானை விசேஷித்துக் கருதுகின்றா ரென்றலும் ஒக்கும்.

 

English Translation

O Benevolent Heart! cutting as under the cords of association with men of devilish birth, you placed me at the feet of the most worshipful beloved ones of our peerless lord and sage Ramanuja. For this grace, I bow to you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top