(2794)
என்னைப் புவியில் ஒருபொரு ளாக்கி மருள்சுரந்த
முன்னைப் பழவி னை வேரறுத்து ஊழி முதல்வனையே
பன்னப் பணித்த இராமா னுசன்பரன் பாதமுமென்
சென்னித் தரிக்கவைத் தான்எனக் கேதும் சிதைவில்லையே.
பதவுரை
|
ஊழி முதல்வனையே |
– |
காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரணபூதனான எம் பெருமானையே |
|
பன்ன |
– |
(எல்லாரும் விவேகித்து) அநுஸந்திக்கும்படி |
|
பணித்த |
– |
(ஸ்ரீபாஷ்யமுகத்தாலே) அருளிச்செய்த |
|
பரன் இராமாநுசன் |
– |
ஸர்வோத்க்ருஷ்டரான எம்பெருமானார் |
|
புவியில் |
– |
இந்தப்பூமியிலே |
|
என்னை ஒரு பொருள் ஆக்கி |
– |
(அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை ஒரு பதார்த்தமாக்கி |
|
மருள் சுரந்த முன்னை பழைவினை வேர் அறுத்து |
– |
அஜ்ஞான மூலகங்களாய் மிகவும் அநாதிகளான (எனது) பாவங்களை வேரறநீக்கி |
|
பாதமும் |
– |
தமது திருவடிகளையும் |
|
என் சென்னி |
– |
எனது தலையிலே |
|
தரிக்க வைத்தான் |
– |
நான் உகந்து தரிக்கும் படியாக வைத்தருளினார்; (இவ்வளவுமஹாப்ரஸாதம் பெற்றோனான பின்பு) |
|
எனக்கு |
– |
அடியேனுக்கு |
|
எதும் சிதைவு இல்லை |
– |
எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு ஆளான நான் இனி ஒருநாளும் எவ்விதமான ஹாநியையும் அடைமாட்டேன் என்கிறார், பதார்த்தகோடியில் சேராமல் துச்சனாயிருந்த எனது கருமங்களையெல்லாம் வேரற நீக்கி, தமது பாதாரவிந்தங்களையும் என் தலைமேலே வைத்தருளினார் எம்பெருமானார்; இப்பேறு பெற்ற எனக்கு இனி ஒரு குறையுமில்லை என்றாராயிற்று.
மருள் சுரந்த – அஜ்ஞாந்த்தாலே செய்யப்பட்ட என்கை; மருளாலே சுரக்கப்பட்ட என்றவாறு. (ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த) ஊழிமுதல்வனான எம்பெருமானையே பரவும்படி அமுதனாராகிய தம்மைச்செய்தருளின – என்று அர்த்தமல்ல; பகவத்விமுகரா யிருந்தவர்களை யெல்லாம் உபதேசாதி முகத்தாலே பகவத் ப்ரவணராம்படி செய்தருளினவர் என்று பொதுப்படையாகச் சொன்னபடி. ஊழிமுதல்வன் – பிரளயகாலத்தில் முழுமுதற் கடவுளாயிருந்தவன் என்றுமாம்.
English Translation
Our lord Ramanjua, who exhorted all to worship the first-Lord alone, made a person out of me in this world. He destroyed by the root the darkness my age-old Karmas, and gave me his feet to wear on my head, I have nothing to fear.
