(2536)

(2536)

அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்அந் தண்ணந்துழாய்க்கு

உளப்பெருங் காதலில் நீளிய வாயுள ஓங்குமுந்நீர்

வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன்

தளப்பெரு நீண்முறு வல்செய்ய வாய தடமுலையே.

பதவுரை

வல்வினையேன்

கொடிய தீவினையையுடைய எனது
தள பெரு நீள் முறுவல் செய்யவாய தடமுலை

முல்லையரும்பினளவான பெருமையும் நீட்சியுமுள்ள பல்வரிசையை யுடைய சிவந்த வாயுடையளாயிப் பெரிய தனங்களையுடையவளாகிய இப்பெண்பிள்ளை (என்ன சொல்லுகிறாளென்றால்)
அளப்பு அரு தன்மைய

“அளவிடுதற்கு அரியதான தன்மையையுடைய
ஊழி

கற்பங்களினும்
அம்

அழகிய (நீண்ட)
கங்குல்

இராப்பொழுதுகள்
அம் தண்ணம் துழாய்க்கு உளம் பெரு காதலின் நீளிய ஆய் உன்

அழகிய குளிர்ந்த  திருத்துழாய் விஷயமாக (என்) உள்ளத்திலே வளர்கிற மிக்க வேட்கைபேலால் நீண்டனவாயுள்ளன.
ஓங்கு முந்நீர் வளம் பெரு நாடன்

உயர்ந்த கடல் சூழ்ந்த வளப்பமுள்ள பெரிய நாட்டையாளுபவன்
மதுசூதனன்

மதுவென்னும் அசுரனையழித்தவன்
என்னும்

என்று வாய்விட்டுச் சொல்லியலற்றுகிறாள்.

ஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இராப்பொழுது நெடுகிச் செல்லுமாறு கண்டு ஆற்றாமை மீதூர்ந்த தலைவியைப் பற்றித் தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. என் மகளானவள் ஓரிரவு ஏழூழியாய நெடுகும்படியையும் தனது நாயகனான திருமாலின் ரக்ஷகத்வத்தையும் விரோதி நிரஸாரைமாதந்யத்தையும் வாய்மாறாது கூறி அலற்றுகிறாளென்கிறாள் தாய். என்னுடைய காதலுக்கு எப்படி முடிவு இல்லையோ அப்படியே இவ்விரவுகளும் முடிவில்லை யென்கினாள்  மகள்- என்பது முன்னடிகளால் தெரிவிக்கப்பட்டது. “நீளியவாயுள என்னும்” என்று அநயவித்துக் கொள்கை. ‘என்னும்’ என்பது இப்பாட்டிற்கு வினைமுற்று என்று சொல்லுகிறாள் என்கை.

‘அளப்பருந் தன்மைய வூழியங்கங்குல்’ என்பதற்கு – “அளக்க வரியதையம் அளந்தவன் திருவடிகளாலும் அளக்கப்போகிறதில்லை; அளக்கலாகில் வந்து தோற்றனோ?’ நாடன்’ என்றது- உலகத்தை கடல் விழுங்காமல் நோக்குமவன் என்ற கருத்தைத் தந்து அவனது  ரக்ஷகத்வத்தைப் புலப்படுத்தும். ‘மதுசூதனன்’ என்றது- உலகத்துக் கொடியவரால் நேரும் கலிவைத் தீர்த்துக் கொடுப்பவதென்று துஷ்டநிக்ரஹ ஸாமர்த்தியத்தைப் புலப்படுத்தும். ஊழியங்கங்குல்- “கங்குலுக்கு அழகாவது- கற்பத்திலும் நெடிதாயிருக்கை ‘அம்’ சசியையுமாம். நெடுகிச் செல்லுகின்ற கங்குலைக் குறுக்குதலோ, அல்லது எம்பெருமானைக் கூட்டுதலோ இண்டத்தொன்று செய்யமாட்டாமையால் தாய் ‘வல்வினையேன்’ என்று தன்னைத்தானே வெறுத்துக் கூறுகின்றாளென்க.

இரண்டாமடியில் ‘காதலின்’ என்ற ஐந்துனுருபு- ஒப்புப் பொருளது. என் காதல்போல நீண்டிருக்கின்ற தென்கை. முல்லை யரும்பு என்னும் பொருள்கொண்ட ‘தளவு’ என்னுஞ் சொல் ‘தள’ என விகாரப்பட்டது. தடமுலையையுடையவள் எனப்பொருள் படுதலால் அன்மொழித்தொகை. ‘வாய’ என்னுந் குறிப்புப் பெயரெச்சம் தடமுலையவளுக்கு அடைமொழி. நீளிய = இறந்தகாலப் பலவின்பால் வினையாலணையும் பெயர். நீள் என்பது பண்படியல்லாமல் விளைப்பகுதியாதலால் குறிப்பு வினையாலணையும் பெயரன்று.

எம்பெருமானைச் சேர்தற்குக் கால தாமதத்தைப் பொறுக்கமாட்டாத ஆழ்வாருடைய நிலையைக் கண்டு ஞானிகள் நொந்துரைத்த வார்த்தை இதற்கு உள்ளுறைபொருள். உலக முழுவதையும் தன்னுடைமையாக வுடைய எம்பெருமான் இவரது உட்பகைகளை யொழித்து இவரைச் சேர்த்துக்கொள்ள வல்லவனா யிருக்கச் செய்தேயும் அங்ஙனஞ் செய்யாது விளம்பித்தலால் இவர்க்கு இந்த இருள் தருமா ஞாலத்திலிருப்பு நெடுகித் தோற்றுகையாலே, ஆற்றாமை பிறந்து, அது விஞ்சுதலால் இவர் அத்தன்மையை வாய்விட்டுக் கூறியமை இப்பாட்டில் விளங்கும். இவருடைய திருமுகமண்டல விளக்கமும் சொல்திறமும் பக்திவளர்ச்சியும் ஈற்றடியிற் சொல்லிற்றாம்.

English Translation

Alas, the sinner that I am! My daughter with a soft winsome smile, coral Hps and broad breasts, laments. “This long as on aeon night, impossible to measure, stretches infinitely by my craving for the cool Tulasi of the lord Madhusudana.  but alas! he is the rule of the Ocean-girdled Earth”.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top