(2271)

(2271)

மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,

விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, – நண்ணித்

திருமாலை செங்க ணெடியானை, எங்கள்

பெருமானைக் கைதொழுத பின்.

 

பதவுரை

திருமாலை

பிராட்டியினடத்தில் வியாமோஹமுடவனும்

செம் கண்

செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்

நெடியானை

ஸர்வேச்வரனுமான

எங்கள் பெருமானை

எம்பெருமானை

நண்ணி

கிட்டி

கை தொழுத பின்

அஞ்ஜலி பண்ணி ஆச்ரயித்த பின்பு

மண் உலகம் ஆளேளே

இவ்விபூதியை நானிட்டவழக்காக நிர்வஹிக்கமாட்டேனோ?

வானவர்க்கும் வானவன் ஆய்

தேவாதிதேவனாய்க் கொண்டு

விண் உலகம் தன் அகத்து

நித்யவிபூதியிலே

மேவேனே

நித்யாநந்த மநுபவிக்கமாட்டேனோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘ஆழ்வீர்! நாம் முன்புசெய்த காரியங்களை எடுத்துரைக்கிறீர், அஃது இருக்கட்டும். இப்போது நாம் உமக்குச் செய்யவேண்டிய காரியம் ஏதேனுமுண்டாகில் சொல்லிக் காணீர்‘ என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் அருளிச்செய்ய, பிரானே! உன்னை ஆச்ரயித்தபோதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேனோனேன்காண், மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தோடு வாசியற உபயவிபூதியும் நானிட்டவழக்காம்படி ஆள்வதற்கு உதியேனானபின்! இனி எனக்குச் செய்யவேண்டுவதொன்றுண்டோ? என்றாராயிற்று.

 

English Translation

Our Lord has lotus eyes. He is the Master of all, He bears the lady sri on his chest.  Though I worship him, it is not for gaining Earthly kingship nor even for the celestial kingdom of Indra, king of gods.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top