(2268)

(2268)

இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச்

சென்றாங் களந்த திருவடியை, – அன்று

கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,

திருக்கோட்டி எந்தை திறம்.

 

பதவுரை

அன்று கரு கோட்டியுன் கிடந்து

முன்பு கர்ப்ப ஸ்தானத்துக்குள்ளே கிடந்து

திருக்கோட்டி எந்தை திறம்

திருக்கோட்டியூர்ப் பெருமானுடைய தன்மைகளை

கண்டேன்

கண்டு அநுபவிக்கப்பெற்றேன்

கை தொழுதேன்

கைதொழவும் பெற்றேன், (ஆனபின்பு)

இரு நிலத்தை

விசாலமான இந்நிலத்தை

ஆங்கு சென்று அளந்த திரு அடியை

அங்கங்கே தானே வியாபித்து முழுதும் அளந்து கொண்ட திருவடியை

இன்று ஆ அறிகின்றேன் அல்லேன்

இன்றைக்குத்தான் அறிந்து கொண்டே னென்பதில்லை. (கர்ப்பவாஸமே தொடங்கி அறிவேன்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டும் கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமானதேயாம் எம்பெருமானது திருவருளால் தமக்குண்டான வைலக்ஷண்யத்தைப் பேசுகிறார். நான் கர்ப்பவாஸம் செய்யும்போதே பிடித்து எம்பெருமானால் நிர்ஹேதுகமாகக் கடாக்ஷிக்கப்பெற்றுத் தன்னுடைய ஸ்வரூப ரூபகுண் விபூதிகளையெல்லாம் அவன் தானே காட்டக்கண்டு “ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யேத் மதுஸூதந ஸாத்லிகஸ் ஸது விஜ்ஞேயஸ் ஸவை மோக்ஷார்த்த சிந்தக – (கர்ப்பத்திலேயே எம்பெருமான் எவனைக் கடாக்ஷித்தருள்வனோ அவனே ஸாத்விகன், அவனே முழுக்ஷுவாவான்) என்கிறபடியே சுத்த ஸாத்விகனாய் அப்பெருமானுடைய திருக்கல்யாண குணம் முதலியவற்றை ஸ்வயம் அநுபவிப்பதும் பிறர்க்கு எடுத்து உபதேசிப்பதுமாக இவற்றையே காலக்ஷேபமாகக் கொண்டிருந்தவன், எல்லாரும் பகவானை மறந்திருக்கும்படியான கர்ப்பவாஸ காலத்திலுங்கூட அடியேன் அவனை மறவாது வாழ்த்தக்கொண்டிருந்தேனாகையால், நான் எம்பெருமானை நெடுநாளாகவே அறிந்தவனேயன்றி இன்று புதிதாக அறிந்தவனல்லேன்.

இருநிலத்தைச் சென்று ஆங்களந்த திருவடியை என்றது இங்கு விசேஷாபிப்ராயத்தோடு கூடியது, “அவன் அளக்கிற விடத்திலே பூமி சென்றதோ? பூமி கிடந்தவிடமெல்லாம் தானே சென்று அளந்தானித்தனையன்றோ“ என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி. உலகமுள்ள விடமெல்லாம் தானே சென்று அடிப்படுத்திக் கொண்டதுபோல அவன் தானே மேல்விழுந்து விஷயீகரிக்கப்பெற்றேனடியேன் என்றவாறு.

இதில் முன்றாமடியில் ஒரு சங்கை பிறக்கும், அதாவது – குருக்கத்திப் பந்தரிலே ஒரு குருக்கத்திமலரிலே திருவவதரித்தத்தனால் அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸமென்பது கிடையாதே, அப்படியிருக்க “கருக்கோட்டியுள் கிடந்து“ என்று இவர் தாம் எங்ஙனே அருளிச்செய்கிறாரென்று.

இதற்கு உத்தரமாவது – ‘கருக்கோட்டியுள் கிடந்து‘ என்ற விகனால் * தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும் வேண்டாநாற்றம் மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில்நின்றும் ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை, எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்ப ஸ்தாநமாகும். ‘நான் இவ்விருள் தருமாஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்‘ என்று சொல்லுவதே இங்கு விவக்ஷிதம். “அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்“ என்றாற்போலுமாம்.

 

English Translation

Is it only now that I understand my Tirukottiyur Lord’s grace?  Certainly not. Even when I lay in the dark womb I folded my hands and saw the feet of the Earth-straddling Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top