(2269)

(2269)

திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,

திறம்பா வருசென்றார்க் கல்லால், – திறம்பாச்

செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்

கடிநகர வாசற் கதவு.

 

பதவுரை

தென் அரங்கத்து எந்தை

தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய

திறம்பா வழி

பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)

சென்றார்க்கு அல்லால்

நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)

தாம்

தாமாகவே

திறம்பா செடி நரகை நீக்கி

அறுக்கமுடியாத புதர்போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக்கொண்டு

செல்வதன் முன்

போவதற்குள்ளே

வானோர்

நித்யஸூரிகளுடையதும்

கடி

அரணையுடையதானதுமான

நகரம்

வைகுந்தமா நகரத்தினுடைய

வாசல் கதவு

வாசற் கதவானது

திறம் பிற்று

மூடிக்கொண்டதாகும்

இனி அறிந்தேன்

(இதை) இப்போது அறிந்து கொண்டேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானே வேறொன்றை எதிர்பாரத உபாயபூதன் என்று நன்குணர்ந்து அவ்வுணர்ச்சியின்படியே நடந்து கொள்ளுமவர்களே ஸம்ஸாரபந்தத்தை அறுத்துக்கொண்டு வைகுந்த நின்வாசலினுள்ளே புகப்பெறுவர், மற்றையோர்களுக்கு வைகுந்த வாசற்கதவு திறவாதே மூடிக்கொள்ளு மென்கிறார்.

திறம்பிற்று –எதிர்காலப்பொருளில் இறந்தகாலமாகச் சொன்னது காலவழுவமைதி.

 

English Translation

The Lord of Arangam, my Father, clears the path of hellish thickets and opens the portal doors of his citadel for those who tread the path of worship. For others, he closes the doors. I know this now.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top