(2192)
கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்.
பதவுரை
|
(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்) |
||
|
அமரக் கடை நின்று |
– |
தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று |
|
நாளும் கழல் தொழுது |
– |
நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து |
|
(பரமாநந்தம் பெறமாட்டாமல்) |
||
|
இடைநின்ற இன்பத்தர் ஆவர் |
– |
நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்; |
|
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே |
– |
(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!, |
|
நின் அடியை |
– |
உனது திருவடிகளை |
|
ஓதவல்லாரவர் ஆர் |
– |
அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பெரும்பாலும் இவ்வுலகத்தவர்கள் தேவதாந்தர பஜனஞ்செய்து சுவையற்ற அற்ப பலன்களைப் பெற்று அநர்த்தப்படுகின்றனரேயன்றி உன்னையுணர்ந்து ஆச்ரயித்து உஜ்ஜீவிப்பவர் யாருமில்லையே! என்று வருந்திப் பேசுகிறார்.
கடைநின்றமரர் கழல்தொழுது = அமரர் கடைநின்று கழல் தொழுது என்க. கடையாவது மனைவாசல்; தேவதாந்தரங்களின் மனைவாசலிலே நின்று என்றது – அவர்களை ஆராதித்தமை கூறியவாறு. இனி, தொகுத்தல் விகாரமாகக்கொண்டு, “கடைநின்ற + அமரர்” என்று பிரித்து, ‘தாழ்ந்த தெய்வங்களின் காலிலே விழுந்து’ என்பதாகவும் பொருள்கொள்ளலாம். இடைநின்ற வின்பத்தராவர் – எம்பெருமானைப் பணிந்தவர்க்குக் கிடைக்கக் கூடிய பரமபதாநுபவமொன்றே உத்தமமாகையாலும், அதற்குக் கீழ்ப்பட்ட ஸ்வர்க்காநுபவம் முதலிய பலன்களெல்லாம் இடைக்கட்டாதலாலும்; தேவதாந்தர பஜனம் பண்ணுவார்க்கு அப்படிப்பட்ட ஹூத்ரபலன்களே கிடைக்குமாதலாலும் “இடைநின்ற இன்பத்தராவர்” என்னப்பட்டது. இன்பமென்றதும் ப்ரமித்தவர்களின் கருத்தாலேயாம். ‘ஆவர்’ என்பதற்கு எழுவாய் வருவித்துக் கொள்க.
English Translation
Filled with love, I stand with flowers and proper chants. O Protector! As a child you destroyed a cart, Asking for land you protected the earthlings Pray correct my ways.
