(2140)

(2140)

அடைந்த அருவினையோ டல்லல்நோய் பாவம்,

மிடைந்தவை மீண்டொழிய வேண்டில், – நுடங்கிடையை

முன்னிலங்கை வைத்தான் முரணழிய, முன்னொருநாள்

தன்விலங்கை வைத்தான் சரண்.

 

பதவுரை

அடைந்த

அடியே பிடித்துப் பற்றிக்கிடக்கிற

அரு

போக்குவதற்கு அருமையான

வினையோடு

பழவினைகளும்

அல்லல்

(அந்தப் பழவினையின் பயனாக வருகின்ற) மனத்துன்பங்களும்

நோய்

சரீரவியாதிகளும்

பாவம்

இப்போது செய்கிற பாவங்களும்.

மிடந்தவை

[இப்படிப் பலவகையாக] ஆத்மாவைத் தெரியாத படி] மூடிக் கிடக்கின்றவை

மீண்டு ஒழிய வேண்டில்

வாஸனையோடு விட்டு நீங்க வேணுமானால்

முன்

முன்பொருகால்,

நுடங்கு இடையை

மெல்லிய இடையையுடையளான பிராட்டியை

இலங்கை வைத்தான்

லங்காபுரியில் சிறை வைத்தவனான இராவணனுடைய

முரண் அழிய

மிடுக்கு அழியும்படி

முன் ஒரு நாள்

ஸ்ரீராமனாய்ப்பிறந்தவொருகாலத்து

தன் வில்

தன்னுடைய வில்லை

அம்கை

அழகிய திருக்கையிலே

வைத்தான்

எடுத்துப் பிடித்தவனான பெருமானே

சரண்

உபாயமாவான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாம் நல்ல வழியிற் போதுபோக்கவேணுமானால் பகவானை ஆச்ரயிப்போம்; அப்படி அவனை ஆச்ரயிக்குமிடத்து ஆச்ரயிக்க வொட்டாமல் இடையூறாக அருவினை அல்லல்நோய் பாவம் முதலியவை குறுக்கே நிற்கின்றனவே! அவற்றைப் போக்கும்வழி யாது? என்று சங்கை பிறக்க, நமது பிரதிபந்தநங்களை இருதுண்டமாக்குவதற்கு உபாயமாக ஸ்ரீராமபிரானைச் சரணம்புகுதல் நன்று என்கிறார். இத்தால், எம்பெருமானுக்கு போக்யமாயிருந்துள்ள ஆத்மவஸ்துவை என்னுடைய தென்று செருக்குற்றிருக்குமவர்கள் ராவணாதிகள் பட்டது படுவாரென்னுமிடமும், இவ்வாத்வைஸ்து அவனுடையது’ என்று அநுகூலித்திருக்குமவர்களுக்கு வரும் விரோதகளை அப்பெருமான் பிராட்டியின் துயரத்தைப் பரிஹரித்ததுபோலே பரிஹரித்தருள்வனென்னும்மிடமும் தெரிவிக்கப்பட்டனவாம்.

 

English Translation

Attain the Lord our refuge, -who in the yore wielded his bow on the Lanka king for abducting his slender-waisted ska, -If you wish toberidofthesins, miseries, sicknesses, and karma of the past permanently.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top