(2139)

(2139)

தொழுது மலர்க்கொண்டு தூபம்கை யேந்தி,

எழுதும் எழுவாழி நெஞ்சே, – பழுதின்றி

மந்திரங்கள் கற்பனவும் மாலடியே கைதொழுவான்,

அந்தரமொன் றில்லை அடை.

 

பதவுரை

நெஞ்சே

மனமே!

மலர் கொண்டு

புஷ்பங்களை சம்பாதித்துக் கொண்டும்

தூபம்

தூபத்தை

கை ஏந்தி

கையிலே ஏந்திக் கொண்டும்.

தொழுது

(எம்பெருமானை ) வணங்கி

எழுதும்

உஜ்ஜீவிப்போம்;

எழு

நீ புறப்படு;

வாழி

(உனக்கு இந்த ஸ்வபாவம்) நித்தியமாயிடுக:

[நான் இப்படிச் சொல்லவதற்குக் காரணமென்னவென்றால்]

மந்திரங்கள்

பகவந் மந்த்ரங்களை

பழுது இன்றி கற்பனவும்

முறைப்படியே நாம் அப்யஸிக்கின்றனவும்

மால் அடி கை தொழுவான் ஏ

ஸர்வேச்வரன் திருவடிகளைத் தொழுவதற்காகவேயாம்:

[ஆனபின்பு]

அந்தரம் ஒன்று இல்லை

(நாம் ஆறியிருப்பதற்கு) அவகாசம் சிறிதுமில்லை;

அடை

(அப்பெருமானை) விரைவில் சென்றுகிட்டு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நெஞ்சே! நாம் பகவத் விஷயத்தை விட்டு ஒரு நொடிப்பொழுதும் ஆறியிருக்கவழியில்லை; நாம் குருகுலவாஸம் பண்ணி மந்த்ரங்களை அப்யஸிப்பதெல்லாம் எம்பெருமானை அடிபணிவதற்கேயன்றி வேறொரு பிரயோஜனத்திற்காக வன்றே; ஆனபின்பு, தூபதீபபுஷ்பாதிகளான உபகரணங்களைக் கையிற்கொண்டு அப்பெருமானை ஆராதிக்கச் செல்வோம். எழுந்திரு; இனிநாம் தாமஸித்திருப்பதற்கு அவகாசமேயில்லை – என்று தம் திருவுள்ளத்தை த்வரைப்படுத்துகிறார்.

“மலர் கொண்டு தூபம்கையேந்தி- தொழுது எழுதும் எழு” என்று ஆழ்வார் சொன்னவுடனே நெஞ்சு மிகவும் அதற்கு அநுகூலப்பட்டிருக்கவே “வாழி நெஞ்சே” என்று உவப்பினால் மங்களாசாஸநம் செய்தாரென்க; இந்த ஆநுகூல்யம் உனக்கு ஒருநாளும் மாறாதிருக்க வேணுமென்றவாறு.

பழுது இன்றி = குருகுலவாஸம் செய்யாமல் மந்த்ரங்களைக் கற்பது பழுது; அப்படிப்பட்ட பழுது இல்லாமல் [குருகுலவாஸம் பண்ணி] என்றபடி. அந்தரம் ஒன்று இல்லை –’பிறகு பார்த்துக்கொள்வோம்’ என்று ஆறியிருக்க அவகாசம் சிறிதுமில்லை.

 

English Translation

Offering worship with freshly culled flowers, and incense, -O Heart of mine!, -arise, awake and succeed.  All the Mantras learnt without a fault are for the worship of the adorable Lord.  Do not tarry, attain him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top