(2134)

(2134)

சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,

நின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும்

புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம், திருமாற் கரவு.

 

பதவுரை

திரு மாற்கு

பிராட்டியோடு (எப்போதும்) கூடியிருக்கிற பெருமானுக்கு

அரவு

திருவனந்தாழ்வான்,

சென்றால் குடை ஆம்

(அப்பெருமான் )உலாவினால் (அப்போது மழை வெயில் படாதபடி) குடையாக உருவெடுப்பன்;

இருந்தால்

எழுந்தருளியிருந்தால்

(அப்போது)

சிங்காசனம் ஆம்

ஸிம்ஹாஸாமாயிருப்பன்;

நின்றால்

நின்று கொண்டிருந்தால்

(அப்போது)

மரவடி ஆம்

பாதுகையாவன்;

நீள் கடலுள்

பாம்பினையுடலிலே

(சயனிக்கும்போது)

என்றும்

எப்போதும்

புணை ஆம்

திருப்பள்ளி மெத்தையாவன்;

அணி விளக்கு ஆம்

மங்கள தீபமாவன்;

பும்பட்டு ஆம்

அழகிய திருப்பரி வட்டமாவன்;

புல்கும் அணை ஆம்

தழுவிக்கொள்வதற்கு உரிய அணையுமாவன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவனந்தாழ்வானைப்போல எம்பெருமானுக்கு எல்லாக்காலங்களிலும் எல்லா விதமான அடிமைகளையும் செய்யப்பெற வேணுமென்று திருவுள்ளங்கொண்ட ஆழ்வார் அத்திருவனந்தாழ்வான் செய்யுமடிமைகளை யெடுத்தருளிச் செய்கிறார். எம்பெருமான் உலாவியருளும் போது மழை வெயில் படாதபடி குடையாகவடிவெடுப்பன்; எழுந்தருளீயிருந்தகாலத்தில் திவ்யஸிம்ஹாஸநஸ்வரூபியாயிருப்பன்; நின்று கொண்டிருந்தால் பாதுகையாயிருப்பன்; திருப்பாற்கடலில் திருக்கண்வளர்ந் தருளும்போது திருப்பள்ளி மெத்தையாயிருப்பன்; ஏதேனு மொன்றை விளக்குக்கொண்டுகாண அவன் விரும்பினபோது திருவிளக்குமாவன்; சாத்திக்கொள்ளும்படி திருப்பரிவட்டத்தை அவன் விரும்பினபோது அதுவுமாவன்; சாயந்தருளும்போது தழுவிகொள்வதற்குரிய உபதாநமுமாவன்.

நீள்கடலுள் புணையாம் – திருப்பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவன் என்று முரைக்கலாம் . புல்கும் அணையாம் –எம்பெருமான் பிரணயகலஹத்தினால் பிராட்டிமாரைப் பிரியநேர்ந்தால் அப்போது  விரஹதுக்கம் தோன்றாதபடிக்குத் திருவனந்தாழ்வானைத் தழுவிக்கொள்வனாம்.

மூன்றாமடியில் “ மணி விளக்காம்” என்றும் பிரிக்கலாம்

 

English Translation

Tirumal has a snake, when he walks, it hoods him like a parasol; when he sits, it folds itself into a settle; when he stands, it is at his feet like his sandals; in the deep ocean where he reclines, it becomes a float., its eyes become lamps, if wraps around like gossamer silk and becomes an arm-rest for the Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top