(2132)
எளிதி லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும் செவ்வே, – களியில்
பொருந்தா தவனைப் பொரலுற்று , அரியாய்
இருந்தான் திருநாமம் எண்.
பதவுரை
|
என் உள்ளம் |
– |
எனது நெஞ்சே!(நீ) |
|
தெளிய |
– |
கலக்கம் தீர்ந்து தெளிவுபெற்றால் |
|
(அந்த எம்பெருமானும்) |
||
|
செவ்வே தெளிந்தொழியும் |
– |
மிகவும் நன்றாக ப்ரஸந்நனாவன்; |
|
(ஆகையினால்) |
||
|
களியில் |
– |
அஹங்காரத்தாலே |
|
பொருந்தாதவனை |
– |
அடிபணியாதிருந்த ஹிரண்யாஸீரனோடு |
|
பொரல் உற்று |
– |
போர்செய்யத் தொடங்கி |
|
அரி ஆய் இருந்தான் |
– |
நரசிங்கமாக அவதரித்த பெருமானுடைய |
|
திரு நாமம் |
– |
திருநாமங்களை, |
|
இரண்டு அடியும் எளிதில் காண்பதற்கு |
– |
(அவனுடைய) உபய பாதங்களையும் சுலப மாகக் காணும் பொருட்டு |
|
எண் |
– |
சிந்திப்பாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுடைய திருநாமங்களைப் பரமபோக்யமாக நாம் வாயாரச் சொல்லவே, அப்பெருமான் ப்ரஹ்லாதாழ்வானுடைய விரோதியைத் தொலைத்துத் தன்னைக் கொடுத்தாப் பேர்லே நமக்கும் விரோதியைப் போக்கித் தன்னைத் தந்தருள்வனென்கிறார்.
என்னுள்ளம் என்றது அண்மைவிளி; என்னுள்ளமே! என்றபடி. நீ எம்பெருமானுடைய திருவடியிணையை ஸேவித்து அநுபவிப்பதற்கித் தெளிவுகொண்டிருந்தால் அவன் ப்ரஸந்நனாய் அருள்புரிவன்; நீ தெளிவுற்றிருக்கிறாயென்பது நன்குவிளங்குமாறு ஸ்ரீ நரசிம்ஹமூர்த்தியின் திருநாமங்களை எண்ணிக்கொண்டிரு.
English Translation
Easily the Lord will grant you the vision of his lotus feet, O Heart! He came as a man-lion intending to destroy the unrelenting Hiranya. Contemplate his name it is Mantra of eight syllables.
