(2121)

(2121)

பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ

வெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில்

மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்

கோன்வீழ கண்டுகந்தான் குன்று.

 

பதவுரை

பெருவில்

பெரிய வில்லையும்

பகழி

அம்புகளை முடையரான

குறவர்

குறவர்களினுடைய

கை

கையிற்பிடித்திருந்த

செம் தீ

சிவந்த நெருப்புக்கு

வெருவி

பயப்பட்டு

புனம் துறந்த

கொல்லையை விட்டு நீங்கின

வேழம்

யானையானது,

இரு விசிம்பில்

பரந்த ஆகாசத்தில் நின்றும்

மீன் வீழ

நக்ஷத்திரம் விழ

கண்டு

அதனைப்பார்த்து (நாம் அப்பால் போகமுடியாதபடி குறவர்கள் கை கொள்ளியைப் பூமியிலே எறிந்தார்கள் என்று ப்ரமித்து)

அஞ்சும்

பயப்படுமிடமான

வேங்கடம்

திருவேங்கடமானது

மேல்

முன்பொருகால்

அசுரர் கோன் வீழ கண்டு

இரணியாசுரனை முடித்து

உகந்தான்

ப்ரஹ்லாதனுடைய விரோதி தொலைந்தது என்று மகிழ்ந்த பெருமானுடைய

குன்று

 

திருமலையாம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “வேங்கடமே அசுரர்கோன் வீழக்கண்டு உகந்தான் குன்று“ – பாகவத விரோதியான இரணியனைத் தொலைத்துப் பரமபாகவதனான ப்ரஹ்லாதனைக் காத்தருளின பெருமானந்த ஆச்ரிதபக்ஷபாத மஹாகுணத்தை வெளியிட்டுக்கொண்டு இன்றைக்கும் ஸேவைஸாதிக்குமிடம் திருமலையென்கிறார்.அத்திருவேங்கடம் எப்படிப்பட்டதென்ன அவ்விடத்துச் செய்திகளில் ஒன்றை யெடுத்துரைக்கிறாரிதில். திருமலையிற் கொல்லைகளில் (இராக்காலங்களில்) யானை பட்டி மேய, அதனைத் துரத்துவதற்காக அம்புதொடுத்தவில்லை ஒரு கையிலே கொண்ட குறவர்கள் மற்றொரு கையிலே தீவட்டியைக்கொளுத்திப் பிடித்துக்கொண்டு அதட்டிச்செல்ல, அத்தீவட்டியையும் அம்புகோத்த வில்லையும் கண்ட அக்களிறு அஞ்சி ஓடிப் போக, அகஸ்மாத்தாக ஆகாசத்தில் நின்றும் நக்ஷத்திரம் அவ்யானை பதறிசெல்லும் வழியிடையே வந்து பெருஞ்சோதியுடனே விழ, அதைக்கண்டு இது நக்ஷத்ரமென்ருணராது ‘குறவர்கள் கைத்தீவட்டியையே கீழெறிந்தார்கள்’ என்று ப்ரமித்து ‘இவ்வழியை நாம் எப்படி கடந்து செல்லவல்லோம்? ‘ என்றஞ்சித் திகைத்து நிற்குமிடமாம் அத்திருமலை.

அஸ்தாநே பயசங்கை பண்ணுகிற யானையின் செய்தியைக் கூறினவிதனால் – அஸ்தாநே பயசங்கை பண்ணி எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் பண்ணுகிறமஹான்களின் இருப்பை நினைப்பூட்டினாராகக் கொள்ளலாமென்ப.

 

English Translation

The great bow-wielding gypsies shoot fire-bolts to scare away the wild elephants from their plantations.  Then seeing falling stars, the elephants still fear and flee.  The Lord who killed the Asura Hiranya joyously resides in Venkatam, his abode in the mountains.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top