(2122)
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே, – என்றும்
புறனுரையே யாயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித் திரு.
பதவுரை
|
என் நெஞ்சே |
– |
எனது மனமே! |
|
என்றும் |
– |
எப்போதும் |
|
புறன் உரையே ஆயினும் |
– |
(உள்ளூர இல்லாமல் மேலுக்குச் சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும் |
|
பொன் ஆழி கையான் திறன் உரையே |
– |
சக்ரபாணியான எம்பெருமான் விஷயமாகப் பேசும் பேச்சையே |
|
சிந்தித்து இரு |
– |
அநுஸந்தித்துக் கொண்டிரு; |
|
(அப்படியிருந்தால்) |
||
|
இன்று முதலாக |
– |
இன்று தொடங்கி |
|
குன்று அனைய குற்றம் செய்யினும் |
– |
மலைபோல் (பெருப்பெருத்த குற்றங்களைச் செய்தாலும் |
|
குணம் கொள்ளும் |
– |
(அவற்றையெல்லாம் எம்பெருமான்) குணமாகவே திருவுள்ளம் பற்றுவன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானுடைய வாத்ஸல்யகுணத்திலீடுபட்டுப் பேசுகிறார்; நெஞ்சே!, ஆந்தரிகமான அன்பின் மிகுதியினாலே சொற்களைத்தொடுத்து எம்பெருமானைத் துதிப்பார் பலருண்டு; அப்படிப்பட்ட அன்பு நமக்கு இல்லாமையினால் கழுத்துக்கு மேற்படவே சில சொற்களை நாம் கபடமாகச் சொல்லவல்லோம்; அப்படி மேலுக்குச்சொல்லுகிற வார்த்தையாயிருந்தாலும் அது பகவானைப்பற்றின வார்த்தையாக இருந்துவிடுமாயின் பயன்படும். எம்பெருமான் ‘மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந’ [ ப்ரீதியை பாவனைசெய்து வருபவனையும் கைவிடமாட்டேன் ] என்று சொன்னவனாகையாலே நாம் மேலுக்குச்சொல்லுகிற வார்த்தையையும் அவன் கனத்ததாகத் திருவுள்ளம்பற்றித் தன்னுடைய வாத்ஸல்ய குணத்தை நம்மேல் ஏறிப்பாயவிடுவன்; நாம் மலைமலையாகக் குற்றங்கள் செய்தாலும் 1. “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்னுமவனுடைய திருவுள்ளத்தில் அவையெல்லாம் நற்றமாகவே படும்; அவன் நமது ஆபிமுக்யத்தை மாத்திரமே எதிர்பார்ப்பவனாதலால் நாம் மேலுக்குச் சொல்லும் வார்த்தையும் அவனுக்குக் கார்யோபயோகியாக ஆய்விடுங்காண் – என்றாராயிற்று.
English Translation
Mountain-like faults will be ignored, only your good deeds will be taken into account, O Heart of mine! From this day onwards and forever, always contemplate and prate, -even if it were mere lip-service, -the glories of the discus wielder, the lord of Sri.
