(2034)
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே.
பதவுரை
|
பாய் இரு பரவை தன்னுள் |
– |
பரந்து ஆழ்ந்த திருப்பாற்கடலிலே |
|
பரு வரை |
– |
பெரியதான (மந்தர) மலையை |
|
திரித்து |
– |
சுழலச்செய்து (கடல் கடைந்த) |
|
வானோர்க்கு ஆய் இருந்து |
– |
தேவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து |
|
அமுதம் கொண்ட |
– |
அமுதமெடுத்துக் கொடுத்தருளின |
|
அப்பனை |
– |
உபகாரகனும் |
|
எம் பிரானை |
– |
எமக்கு ஸ்வாமியானவனும் |
|
இரு |
– |
மிகப்பெரிய |
|
வேய் சோலை சூழ்ந்து |
– |
மூங்கிற்சோலைகளாலே சூழப்பட்டு (அதனால்) |
|
விரி கதிர் இரிய நின்ற |
– |
ஸூர்யன் கண்ணுக்குத் தெரியாதபடி யிருக்கப்பெற்ற |
|
மாயிருஞ் சோலை |
– |
திருமாலிருஞ்சோலை மலையிலே |
|
மேய |
– |
நித்ய வாஸம் செய்தருள்கிற |
|
மைந்தனை |
– |
மிடுக்கனுமான ஸர்வேச்ரனை |
|
வணங்கினேன் |
– |
வணங்கப்பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும் திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிராநி்ன்றான் எம்பெருமான்; விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய திருப்பதிகளிலே கோயில்கொண்டிரா நின்றான்; அன்னவனை வணங்கியுய்ந்தேனென்கிறார்.
கடல் கடையும் போது மந்தரமலையை மத்தாக நாட்டிக் கடைந்தனனாதலால் ‘பருவரைதிரித்து‘ எனப்பட்டது. எம்பெருமான் அவாப்தஸமஸ்த காமனாகையாலே அவன் செய்தருளுங் காரியமெல்லாம் பிறர்க்காகவே யிருக்கும்; நிலா தென்றல் சந்தனம் முதலிய பொருள்கள் பிறர்க்கு உபயோகப்படுவதற்கென்றே யிருப்பது போலவே எம்பிரானுமிருப்பனென்பது விளங்க வானோர்க்காயிருந்து என்றது. ”அமுதம் தந்த” என்ன வேண்டியிருக்க கொண்டே என்றது – எம்பெருமானது நினைவாலென்க. கடல் கடைந்து அமுதமெடுத்தது அவர்களுக்காக வல்லாமல் தன்பேறாக நினைத்திருந்ததனால்.
விரிகதிர் இரியநின்ற = ஸூர்ய கிரணங்கள் உள்ளே புகவொண்ணாமல் நிழல் செய்திருக்கையைச் சொன்னபடி.
English Translation
Let us worship the Lord who planted a mountain in the deep ocean, churned it and gave ambrosia to the gods. He is my Lord residing in Malirumsolai surrounded by dense Bamboo thickets.
