(2019)

(2019)

வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த

உறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட

சிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித்

தறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே.

 

பதவுரை

வெறி ஆர்

பரிமளம் மிக்க

கரு கூந்தல்

கரிய கூந்தலையுடைய

ஆய்ச்சியர்

இடைச்சிகளாலே

வைத்த

சேமித்துவைக்கப்பட்டதாய்

உறி ஆர்

உறிகளிலே பொருந்தியதாய்

நறு

மணம்மிக்கதான

வெண்ணெய்

வெண்ணெயை

தான் உகந்து உண்ட

தான் விரும்பி யமுதுசெய்த

சிறியானை

சிறியவனும்

செம் கண்

சிவந்த திருக்கண்களையுடையனுமான

நெடியானை

ஸர்வேச்வரனை

சிந்தித்து அறியாதார்

நெஞ்சாலும் நினைத்தறியாதவர்கள்

என்றும்

எப்போதும்

அறியாதார்

அவிவேகிகளேயாவர்

கண்டாம்

நன்கு அறிவோம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸர்வேச்வரனை நினைத்தறியாதவாகள் எத்தனையேனும் சாஸ்த்ரஜ் ஞானத்தாலே சீரியர்களாயினும் அறிவில்லாதவர்களேயாவர் என்றாயிற்று. “ஒண்டாமரையாள் கேள்வனொருவனையெ நோக்குமுணர்வு” என்கிறபடியே எம்பெருமானை அறியுமதுதே அறிவாதலால் “செங்கணெடியானைச் சிந்தித்ததற்யாதர் என்று மறியாதர்” என்னக் குறையில்லையென்க.

 

English Translation

The lotus-eyed Lord senkanmal came as a child and enjoyed eating the fragrant butter from the rope shelf, kept by the fragrant-coiffured cowherd dames.  Those who do not contemplate and realise him are forever ignorant, we know it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top