(2019)
வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த
உறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட
சிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித்
தறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே.
பதவுரை
|
வெறி ஆர் |
– |
பரிமளம் மிக்க |
|
கரு கூந்தல் |
– |
கரிய கூந்தலையுடைய |
|
ஆய்ச்சியர் |
– |
இடைச்சிகளாலே |
|
வைத்த |
– |
சேமித்துவைக்கப்பட்டதாய் |
|
உறி ஆர் |
– |
உறிகளிலே பொருந்தியதாய் |
|
நறு |
– |
மணம்மிக்கதான |
|
வெண்ணெய் |
– |
வெண்ணெயை |
|
தான் உகந்து உண்ட |
– |
தான் விரும்பி யமுதுசெய்த |
|
சிறியானை |
– |
சிறியவனும் |
|
செம் கண் |
– |
சிவந்த திருக்கண்களையுடையனுமான |
|
நெடியானை |
– |
ஸர்வேச்வரனை |
|
சிந்தித்து அறியாதார் |
– |
நெஞ்சாலும் நினைத்தறியாதவர்கள் |
|
என்றும் |
– |
எப்போதும் |
|
அறியாதார் |
– |
அவிவேகிகளேயாவர் |
|
கண்டாம் |
– |
நன்கு அறிவோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸர்வேச்வரனை நினைத்தறியாதவாகள் எத்தனையேனும் சாஸ்த்ரஜ் ஞானத்தாலே சீரியர்களாயினும் அறிவில்லாதவர்களேயாவர் என்றாயிற்று. “ஒண்டாமரையாள் கேள்வனொருவனையெ நோக்குமுணர்வு” என்கிறபடியே எம்பெருமானை அறியுமதுதே அறிவாதலால் “செங்கணெடியானைச் சிந்தித்ததற்யாதர் என்று மறியாதர்” என்னக் குறையில்லையென்க.
English Translation
The lotus-eyed Lord senkanmal came as a child and enjoyed eating the fragrant butter from the rope shelf, kept by the fragrant-coiffured cowherd dames. Those who do not contemplate and realise him are forever ignorant, we know it.
