(2018)

(2018)

கனையார் கடலும் கருவிளையும் காயாவும்

அனையானை, அன்பினால் ஆர்வத்தால், என்றும்

சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று,

நினையாதார் நெஞ்சென்றும் செஞ்சல்ல கண்டாமே.

 

பதவுரை

கனை ஆர் கடலும்

ஒலிமிக்க கடலையும்

கருவிளையும்

கருவிளைப்பூபையும்

காயாவும்

காயாம்பூவையும்

அனையானை

ஒத்திருக்கின்ற எம்பெருமானை

அன்பினால் ஆர்வத்தால்

அன்போடும் ஆற்றாமையொடும்

சுனை அர் மலர் இட்டு

தடாகங்களில் நிரம்பிய பூக்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து

தொண்டர் ஆய் நின்று

தொண்டர்களாயிருந்து கொண்டு

என்றும்

எப்போதும்

நினையாதார்

நினைக்கப்பெறாதவர்களினுடைய

நெஞ்சு

நெஞ்சானது

என்னும்

ஒருநாளும்

நெஞ்சு அல்ல

நெஞ்சாகமாட்டாது

கண்டாம்

(இதனை நாம் நன்கு) அறிவோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கடல், கருவிளைப்பூ, காயாம்பூ என்னமிவற்றை ஒருபுடை ஒப்பாகச் சொல்லலாம்படியான திருமேனி படைத்த எம்பெருமான் பக்கலில் ப்ரேமவிசேஷத்தோடே, சுனைகளில் ஏற்கெனவே நிறைந்துள்ள புஷ்பங்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து அடிமைத் தொழிலுக்கு இசைந்து அவனையே சிந்தித்திருக்க மாட்டாத நெஞ்சு நெஞ்சேயன்று, நஞ்சுதான் அது என்ற தாயிற்று.

அன்பினால் ஆர்வத்தால் – அன்பாவது ஸ்நேஹம்; ஆர்வமாவது, பெறாவிடில் முடிந்து போம்படியான ஆற்றாமை.

சுனை ஆர்மலர்-இவன் புதிதாகப் புஷ்பங்களை ஸ்ருஷ்டிக்கவேண்டிய அருமையில்லை ஏற்கெனவே சுனைகளில் பூக்கள் நிரம்பியுள்ளன் இசைவுதானே வேண்டுவது என்று காட்டுகிறபடி. “தரமுளரே தம்முள்ள முள்ளுளதே தாமரையின் பூவுளதே ஏத்தும் பொழுதுண்டே” என்ற பூதத்தாழ்வார்பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

 

English Translation

The Lord has the hue of the roaring sea, the Karuvilai flower and the kaya flower, Those who do not cull fresh flowers from the lotus tanks and offer worship with love and enthusiasm, or even think of it, have no feeling, we know it.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top