(2000)
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய்,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும்
விண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே.
பதவுரை
|
ஏடீ |
– |
தோழீ! |
|
கண்டார் |
– |
பார்த்தவர்களெல்லாரும் |
|
இரங்க |
– |
மனமிரங்கும்படி |
|
கழிய குறள் உரு ஆய் |
– |
மிகக் குள்ளவடிவுடையவனாய்க் கொண்டு |
|
வண்தாரான் |
– |
வள்ளல்தனத்தைக் காட்டுகின்ற தனிமாலையையணிந்த மாவலியினுடைய |
|
வேள்வியில் |
– |
யாகபூமியிலே |
|
மண் இரந்தாண் காண |
– |
மண்ணையாசித்தானன்றோ |
|
சாழலே |
– |
தோழீ! |
|
வண்தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும் |
||
|
விண்டு |
– |
விஷ்ணுவாய் |
|
ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் |
– |
எல்லாவுலகத்தினும் மேம்பட்டவன் காண் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஈற்றடியில் வண்டு என்றது ‘விஷ்ணு’ என்ற வடசொல்லின் விகாரமாகவுமாம் ‘விள்’ என்னும் வினைப்பகுதி யடியாப்பிறந்த வினையெச்சமாகவுமாம்.
English Translation
“Aho, Sister! it was a pitiable sight, -he come as a small manikin to the generous Mabali;s sacrifice and begged for a piece of land, see!”.
“But though he begged for a piece of land in the generous Mabali;s sacrifice, he cannot be contained even by the seven worlds, so tally!”.
