(1831)
சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த,
பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை,
திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே.
பதவுரை
| முன் |
– |
முன்பொருகாலத்தில் |
| சிங்கம் அது ஆய் |
– |
நாஸிம்ஹ மூர்த்தியாகி |
| அவுணன் |
– |
(இரணியனென்னும்) அசுரனுடைய |
| திறல் ஆகம் |
– |
வலிமையுள்ள மார்பை |
| கீண்டு |
– |
எளிதாகக்கிழித்து |
| உகந்த |
– |
திருவுள்ளமுவந்தவனும் |
| மா |
– |
பெரிய |
| பங்கயம் மலர் |
– |
தாமரைப்பூப்போன்ற |
| கண் |
– |
திருக்கண்களை யுடையவனும் |
| பரனை |
– |
எல்லாரினும் மேம்பட்டவனும் |
| எம் |
– |
எமக்கு நாதனும் |
| பரம் சுடரை |
– |
பரஞ்சோதியென்று ஓதப்பட்டவனும், |
| திங்கள் |
– |
சந்திரமண்டலத்தோடும் |
| மா முகில் |
– |
மேகமண்டலத்தோடும் |
| சேர் |
– |
படிந்த (சிகரத்தையுடைத்தான) |
| நல் |
– |
விலக்ஷணமான |
|
திருமாலிருஞ்சோலையில் |
||
| நின்ற |
– |
நிற்பவனுமான |
| நங்கள் பிரானை |
– |
எம்பெருமானை |
| என் நல் நுதல் |
– |
அழகிய நெற்றியை யுடையளான என் மகள் |
| இன்று |
– |
இப்போது |
| நணுகும் கொல் |
– |
சென்று சேர்ந்திடுவனோ? |
English Translation
The Lord with beautiful lotus eyes, our master, came in the yore as a lion and tore the mighty chest of Hiranya with pleasure. He is the radiant Lord residing the Tirumalirumsolai which rises tall, touching the clouds and the Moon. Will my bright-forehead daughter attain him today? I wonder!
