(1830)

(1830)

உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல்,

கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை,

திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,

அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே.

பதவுரை

உலகு எழினையும்

–

ஸப்தலோகங்களையும்
உண்டு

–

(பிரளயகாலத்தில்) திருவயிற்றினுள் அடக்கி
ஒரு பாலகன்

–

ஒரு சிறுகுழவியாய்
ஆல் இலை மேல்

–

ஓராலிலையின்மீது
கண் துயில் கொண்டு

–

திருக்கண்வளர்ந்தருளி
உகந்த

–

திருவுள்ள முவந்த
கரு மாணிக்கம்

–

பெரிய கருமாணிக்கமலை போன்ற வடிவையுடைய
திண் திறல் மா கரி சேர்

–

மிக்க வலிமை வாய்ந்த மதயானைகள் சேரப்பெற்ற
திருமாலிருஞ்சோலை

–

திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற

–

நிற்பவனுமான
அண்டர் தம் கோவினை

–

தேவாதிதேவனை
என் ஆய் இழை

–

சுத்தமான ஆபரணங்களை யணிந்துள்ள என்மகள்
இன்று

–

இப்போது
அணுகும் கொல்

–

கிட்டப்பெறுவளோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கருமாணிக்க மாமலையை – மாணிக்கம் கரிய நிறத்தன்றாதலால் இதனை இல்பொருளுவமை -(அபூதோபமை) யாகக் கொள்க.

“அண்டர்“ என்று இடையர்க்கும் தேவர்க்கும் பெயர். ஆயிழை – ஆய்தல் – ஆராய்தல், நல்லதாகப் பார்த்தெடுத்த அணியப்பட்ட ஆபரணங்களையுடையவள் என்கை, வினைத்தொகையன்மொழி.

English Translation

The Lord who swallowed the seven worlds and slept as a child on a fig leaf is the Lord of the celestials.  He is a dark mountain gem, residing in Tirumalirumsolai amid strong wild elephants. Will my tastefully jewelled daughter reach him today? I wonder!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top