(1832)

(1832)

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து,

வானமும்மண் ணகமும் அளந்த திஜீவிக் கிரமன்,

தேனமர் பூம்பொழில் சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற,

வானவர் கோனையின் று வணங்கித்தொழ வல்லள் கொலோ.

பதவுரை

தானவன்

–

(மஹாபலியென்னும்) அசுரனுடைய
வேள்வி தன்னில்

–

யாகத்திலே
தனியே

–

அத்விதீயனான
குறள் ஆய்

–

வாமநமூர்த்தியாய் (எழுந்தருளி)
நிமிர்ந்து

–

(உதகதானம் பெற்றவாறே) ஓங்கிவளர்ந்து
வானமும்

–

மேலுலகங்களையும்
மண் அகமும்

–

கீழுலகங்களையும்
திரி விக்கிரமன்

–

த்ஜீவிக்ரம மூர்த்தியானவனும்
தேன் அமர் பூ பொழில் சூழ்

–

தேன்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட

திருமாலிருஞ்சோலையில்

நின்ற

–

நிற்பவனுமான
வானவர் கோனை

–

தேவாதிதேவனை

(என்பெண்மகள்)

இன்று

–

இப்போது
வணங்கி தொழவல்லள்

–

ஸேவிக்கப்பெறுவளோ?

English Translation

The Lord came to the Asura Mabali;s sacrifice as a manikin, then grew as Trivikrama and measured the Earth and sky. He is the Lord of celestials residing in Tirumalirumsolai amid honey-dripping flower groves.  Will my daughter be able to bow and worship him today? I wonder!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top