(1784)
கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல்
தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ புனையார்
மணிமாடப் புல்லாணி கைதொழுதேன்
வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே.
பதவுரை
|
கனை ஆர்இடி குரலின் |
– |
இடியிடித்தாற்போன்று மிக்க த்வநியோடு கூடின |
|
கார் |
– |
கறுத்த |
|
மணியின் |
– |
(மாட்டின் கழுத்திலுள்ள) மணியின் |
|
நா ஆடல் |
– |
நாக்கு அசைந்து ஒலிப்ப தானது |
|
தினையேனும் நில்லாது |
– |
தினையளவும் (கொஞ்சமும்) ஓயாமல் |
|
தீயின் |
– |
நெருப்பைக் காட்டிலும் |
|
கொடிது |
– |
கொடுமைபுரியாநின்றது; |
|
புனை ஆர்மணி மாடம் |
– |
அழகுமிக்க மணிமாடங்களை யுடைய |
|
புல்லாணி |
– |
திருப்புல்லாணியை |
|
கைதொழுதேன் |
– |
தொழுவதற்கு ஆசைப்பட்டவளான |
|
வினையேன் மேல் |
– |
பாவியேன் மேல் |
|
வேலையும் |
– |
கடல்தானும் |
|
வெம் தழலே |
– |
வெவ்விய நெருப்பையே |
|
வீசும் |
– |
வீசுகின்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இடி போன்ற ஒலியையுடைய மாட்டுக்கழுத்து மணிகளின் ஓசையானது நெருப்புக்கதுவுமாபோதலு கதுவி நலியாநின்றதே!; திருப்புல்லாணியைத் தொழவேணுமென்று ஆசைப்பட்ட எனக்கு நன்றாயிற்று. கடல்தானும் தனது குளிர்ச்சியெழிந்து வெப்பத்தை ஏறிட்டுக்கொண்டு அலைகளென்கிற வியாஜத்தினால் நெருப்பையே வீசுகின்றதே! என்செய்வேனென்கிறாள்.
வயல்களிலே பகலெல்லாம் மேய்ந்துவிட்டு மாலைப்பொழுதிலே மீண்டு வருகின்ற மாடுகளின் கழுத்திலுள்ள மணிகளின் ஓசை விரஹிகளுக்கு உத்தீபமாகும்; ;மாலைப்பொழுது அணுகிவிட்டதே! தலைவன் இன்னமும் வந்திலனே!; என்று வருத்தத்தையுண்டாக்கி அவ்வழியாலே உத்தீபமாகிற தென்க.
தினையேனும் = தினையென்பது மிகச் சிறியதொரு தானியம்; மிக அற்ப அளவுக்கு அதனை உவமை கூறுவதுண்டு; அற்பகாலமும் என்றபடி. தினையைக் கூறுவதுபோல் எள்ளையும் கூறுவதுண்டு; “எட்டனைப்போது; என்ற திருநெடுநதாண்டகங் காண்க.
English Translation
The ringing chime from the wagging tongue of the black bull;s neckbell never ceases, burning my soul hotter than fire; I joined my hands in worship of the Lord in Pullani with jewelled mansions. Alas! Even the waves of the sea spit fire on my sinful self
