(1775)
அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய்,
சலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு,
உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே.
பதவுரை
|
அலமும் ஆழிபடையும் உடையார் |
– |
காலப்பையும சக்கரமுமாகிற திவ்யாயுதங்களை யுடையரான பெருமான் |
|
நமக்கு |
– |
நம் விஷயத்திலே |
|
அன்பர் ஆய் |
– |
அன்புடையவர் போன்றவராய் |
|
சலம் அது ஆகி |
– |
கபடத்தையுடையவராகி |
|
தகவு ஒன்று இலர் |
– |
சிறிதும் இரக்கமில்லாதவரா யிருக்கின்றார் |
|
(அவர் அப்படியிருந்தாலும்) |
||
|
உலவு கால் |
– |
உலாகின்ற தென்றல் காற்றையுடைய |
|
நல் கழி |
– |
நல்ல கழிகளிலே |
|
ஓங்கு தண் பை பொழிலூடு |
– |
உயர்ந்து குளிர்ந்து பரந்த சோலைகளிடத்தே |
|
புலவு கானல் களிவண்டு இனம் |
– |
புலால் நாற்றம் நாறுகின்ற கடற்கரைச் சோலைகளிலுள்ள களிவண்டுகளின் கூட்டமானது |
|
இசை பாடு |
– |
இசைபாடப்பெற்ற |
|
புல்வாணி |
– |
திருப்புல்லாணியை |
|
(நெஞ்சே!) நாம் தொழுதும் எழு |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கலப்பையையும் சக்கரத்தையும் திவ்யாயுதமாகக் கொண்டவர் நமக்கு எளியவராகத் தகாதவர் ;இவரே நமக்கு ப்ராப்யர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் படுமவர். அப்படிப்பட்டவர் தாமே அன்புடையவர் போலேவந்து கலந்து, அத்தனையும் கபடமாகவே தலைக்கட்டிற்றாகி ;ஒரு பெண் பெண்டாட்டியை இப்படி வஞ்சித்தோம், என்று சிறிது இரக்கமும் இல்லாதவராயிருக்கின்றார். அவர் தாம் இரங்கிற்றிலர் என்று நாம உதாஸீநமாக இருந்துவிட முடியுமோ? பரதாழ்வான் ;சித்திரகூடத் தேறச் சென்று பெருமாள் திருவடிகளிலே தலையை மடுத்தாகிலும் இரங்கச் செய்வித்துக கொள்வோம்; என்று பாரித்து அங்ஙனே செய்தாற்போலே நாமும் திருப்புல்லாணியே சென்று தொழுதாகிலும் அவரை இரங்குவித்துக் கொள்வோம், நெஞ்சே! புறப்படு என்கிறாள்.
உலவு கானல் கழி-உலவு கால் நல்வழி என்று பிரிக்க. கால்-காற்று என்றும் நீர்க்கால் என்றும் பொருள் கொள்ளலாம்.
English Translation
O Heart! The Lord who wields the plough and discus came as a friend and left as a deceiver; he has no compassion. He resides in Pullani by the sea, land of separated lovers, -amid cool enchanting rivulets in the groves where happy bees swarm and sing. Bow that-a-ways and arise
