(1774)
பரவி நெஞ்சே தொழுதும் எழுபோ யவன்பாலமாய்
இரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன்?
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு வெண்திரை
புரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே.
பதவுரை
|
நெஞ்சே |
– |
மனமே! |
|
இனி |
– |
இப்போது |
|
இரவும் நாளும் |
– |
இரவும் பகலும் |
|
கண்துயிலாது இருந்து என்பயன் |
– |
(கண்ணுறங்கா திருப்பதனால் என்ன பயன்? |
|
முத்தம் |
– |
முத்துக்களோடே |
|
விரவி |
– |
கலந்து |
|
நெடு வெண்மணல் |
– |
அதிகமான வெண்மணற்களை |
|
மேல் கொண்டு |
– |
மேலே எறட்டிக்கொண்டு வந்து |
|
வெண் திரை |
– |
வெளுத்த அலைகள் |
|
புரவி என்ன |
– |
குதிரை போல |
|
புதம் செய்துவந்து |
– |
தாவிக்கொண்டு வந்து தள்ளுமிடமான |
|
புல்லாணி |
– |
திருப்புல்லாணியிலே |
|
அவன் பாலம் ஆய் போய் |
– |
அவ்வெம்பெருமான் பக்கல்ஈடு பட்டோமாய்ச் சென்று |
|
பரவி தொழுதும் |
– |
துதிந்து வணங்குவோம் வா, எழு |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- போயவன் பாலமாய் = ;போய்; என்று தனியே பிரிக்கவுமாம், ;போயவன் என்று முழுச்சொல்லாக் கொள்ளவுமாம். முதல் யோஜனையில் ;போய்த்தொழுதும்; என்று அந்வியப்பது; இரண்டாம் யோஜனையில், போயவன் – போனவன் என்றபடி; பிரிந்துபோன வன் திறத்திலேயே நெஞ்சை வைத்தவர்களாய்க் கொண்டு இரவும் பகலும் இங்கே கண்ணுறங்காதிருத்தலால் என்ன பயன்? என்கை.
மேன்மேலும் அலையெறிந்து வருவதைக் குதிரை தாவிவருவதோ டொக்கச் சொல்லுதல் கவிமரபு; புதஞ்செய்தல்-தாவிப்பாய்தல். புரவி-குதிரை.
English Translation
O Heart! what use now, night and day losing sleep over the deserter? He resides in Pullani by the sea where white waves come rushing like gallopping horses, laying white precious stones and pearls at his feet, praise him! Bow that-a-ways and arise
