(1775)

(1775)

அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய்,

சலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு,

உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு இசை

புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே.

 

பதவுரை

அலமும் ஆழிபடையும் உடையார்

–

காலப்பையும சக்கரமுமாகிற திவ்யாயுதங்களை யுடையரான பெருமான்

நமக்கு

–

நம் விஷயத்திலே

அன்பர் ஆய்

–

அன்புடையவர் போன்றவராய்

சலம் அது ஆகி

–

கபடத்தையுடையவராகி

தகவு ஒன்று இலர்

–

சிறிதும் இரக்கமில்லாதவரா யிருக்கின்றார்

(அவர் அப்படியிருந்தாலும்)

உலவு கால்

–

உலாகின்ற தென்றல் காற்றையுடைய

நல் கழி

–

நல்ல கழிகளிலே

ஓங்கு தண் பை பொழிலூடு

–

உயர்ந்து குளிர்ந்து பரந்த சோலைகளிடத்தே

புலவு கானல் களிவண்டு இனம்

–

புலால் நாற்றம் நாறுகின்ற கடற்கரைச் சோலைகளிலுள்ள களிவண்டுகளின் கூட்டமானது

இசை பாடு

–

இசைபாடப்பெற்ற

புல்வாணி

–

திருப்புல்லாணியை

(நெஞ்சே!) நாம் தொழுதும் எழு

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கலப்பையையும் சக்கரத்தையும் திவ்யாயுதமாகக் கொண்டவர் நமக்கு எளியவராகத் தகாதவர் ;இவரே நமக்கு ப்ராப்யர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப் படுமவர். அப்படிப்பட்டவர் தாமே அன்புடையவர் போலேவந்து கலந்து, அத்தனையும் கபடமாகவே தலைக்கட்டிற்றாகி ;ஒரு பெண் பெண்டாட்டியை இப்படி வஞ்சித்தோம், என்று சிறிது இரக்கமும் இல்லாதவராயிருக்கின்றார். அவர் தாம் இரங்கிற்றிலர் என்று நாம உதாஸீநமாக இருந்துவிட முடியுமோ? பரதாழ்வான் ;சித்திரகூடத் தேறச் சென்று பெருமாள் திருவடிகளிலே தலையை மடுத்தாகிலும் இரங்கச் செய்வித்துக கொள்வோம்; என்று பாரித்து அங்ஙனே செய்தாற்போலே நாமும் திருப்புல்லாணியே சென்று தொழுதாகிலும் அவரை இரங்குவித்துக் கொள்வோம், நெஞ்சே! புறப்படு என்கிறாள்.

உலவு கானல் கழி-உலவு கால் நல்வழி என்று பிரிக்க. கால்-காற்று என்றும் நீர்க்கால் என்றும் பொருள் கொள்ளலாம்.

 

English Translation

O Heart! The Lord who wields the plough and discus came as a friend and left as a deceiver; he has no compassion. He resides in Pullani by the sea, land of separated lovers, -amid cool enchanting rivulets in the groves where happy bees swarm and sing.  Bow that-a-ways and arise

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top