(1757)

(1757)

கலையுலாவல்குல் காரிகை திறத்துக்  கடல்பெரும் படையொடும் சென்று

சிலையினால் இலங் தீயெழச் செற்ற திருக்கண்ணங் குடியுள்நின் றானை

மலைகுலா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன்வா யொலிகள்

உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும் வல்லவர்க் கில்லைநல் குரவே.

 

பதவுரை

கலை உலா அல்குல்

நல்ல ஆடை உலாவுகின்ற இடுப்பையுடையளான

காரிகை திறத்து

அழகிற்சிறந்த ஸீதாபிராட்டிக்காக

கடல் பெரு படையொடும் சென்று

ஸமுத்திரத்திற் காட்டில பெரிதான (வானர) சேனையோடே எழுந்தருளி

சிலையினால்

சார்ங்கவில்லாலே

இலங்கை தீ எழ செற்ற

இலங்கை நெருப்புப்பற்றி யெரியும்படி அழித்தவனும்

திருக்கண்ணங்குடியுள் நின்றானை

திருக்கண்ணங்குடியில் எழுந்தருளு யிருப்பவனுமான எம்பெருமான் விஷயமாக;

மலைகுலா மாடம்

மலையென்று கொண்டாடிச் சொல்லத்தக்க மாடங்களை யுடைத்தான

மங்கையர்

திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்கு

தலைவன்

தலைவரும்

மானம் வேல்

சிறந்த வேற்படையை யுடையவருவான

கலியன்

ஆழ்வாருடைய

வாய் ஒலிகள்

ஸ்ரீ ஸூக்தியாய்

உலவு

லக்ஷணங்களில் குறையற்றவையான

சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்

இப்பத்துப் பாசுரங்களையும்

வல்லவர்க்கு

ஓதவல்லவர்களுக்கு

நல்குரவு

ஏழைமை

இல்லை

இல்லையாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- காரிகை – அழகு; அஃதுடையவளுக்கு ஆகுபெயர்; இச்சொல் இங்குச் சிறப்பாக ஸீதையைக் குறித்தது.

கடல்பெரும்படையொடுஞ் சென்று = கடலிற் காட்டிலும் பெரிதான சேனையோடே சென்று என்றும், பெரும்படையோடே கடலிலே சென்று என்றும் பொருள் கொள்ளலாம்.

நல்குரவு – தரித்ரனாயிருத்தல்; எம்பெருமானை இழந்திருத்தலே தாரித்ரியமாகக் கருதத்தக்கது.  ‘நல்குரவு இல்லை’ என்றது – பகவத் கைங்கர்ய லக்ஷ்மி இடையறாதிருக்குமென்றவாறு.  இனி, லௌகிகருடைய ஆசைக்கு ஏற்பப் பொருளுரைக்கவுமாம்.

 

English Translation

This is a garland of ten songs by fall-mansioned Mangai King Kalikanri on the Lord of Tirukkannangudi who marched over Lanka with an army and burnt the city to the dust with his bow, for the sake of his corsetted sita. Those who master it will never suffer poverty.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top