(1756)

(1756)

பன்னிய பாரம் பார்மகட் கொழியப் பாரத மாபெரும் போரில்

மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர் மைத்துனர்க் குய்த்தமா மாயன்

துன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்

தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.

 

பதவுரை

பார்மகட்கு

பூமிப்பிராட்டிக்கு இருந்த

பன்னிய பாரம்

விஞ்சின பாரமானது

ஒழிய

விட்டுநீங்கும்படி

பாரதம் மா பெரு போரில்

மிகப் பெரிய பாரதயுத்தத்தில்

மன்னர்கள்

அரசர்கள்

மடிய

தொலையும்படி

மைத்துனற்கு

அர்ஜுநனுக்கு

மணி நெடு திண் தேர் உய்த்த

மணிகளுடையதாய்ப் பெரிதாய்த் திடமாயிருந்த தேரை நடத்தின

மா மாயன்

ஆச்சரிய சக்தியுக்தனான பெருமான்,-

துன்னு மாதவியும்

நெருங்கின குருக்கத்தியும்

சுரபுனை பொழிலும்

சுரபுன்னைச் சோலைகளும்

சூழ்ந்து எழு செண்பகம்

சுற்றிலுமுண்டான செண்பகங்களும் ஆகிய இவற்றினுடைய

மலர்வாய்

பூக்களிலே

அளிகள்

வண்டுகள்

தென்ன என்று

தென்ன தென்ன வென்று

முரன்று

ஆலாபித்து

இசை பாடும்

இசைபாடப்பெற்ற

திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மைத்துனற்குத் தேர் உய்த்த = கண்ணபிரானுக்கு அர்ஜுநன் எப்படி மைத்துனன்? என்று கேள்வி பிறக்கும், கேண்மின் : பெண் கொடுத்துக் கொள்ளுதற்கு உரிய உறவுமுறைமை யுடையாரை மைத்துனன்மாரென்பது தமிழ் மரபாதல் பற்றிப் பாண்டவர்கள் கண்ணபிரானுக்கு மைத்துனன்மாராவர் என்று பெரியோர் சொல்லக்கேள்வி; “மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து” என்ற பெரியாழ்வார் திருமொழியுங்காண்க.

 

English Translation

To rid the Earth of its burden, the wonder-Lord came as charioteer for his brother-in-low Arjuna, and orchestrated the great Bharata war slaying the insolent kings.  His standing form adorns the temple of Tirukkannangudi surrounded by dense graves of Madavi, Surapunnai and senbakam over which bumble bees hover and sing Tenaka in song.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top