(1753)
மழுவினால் அவனி அரசைமூ வெழுகால் மணிமுடி பொடிபடுத்து உதிரக்
குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம் தவிர்ந்தவன், குலைமலி கதலிக்
குழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும் குளிர்தரு சூதம்மா தவியும்
செழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
பதவுரை
|
மூ எழு கால் |
– |
இருபத்தொரு தலைமுறையளவும் |
|
அவனி அரசை |
– |
பூமியிலுள்ள ராஜாக்களுடைய |
|
மணி முடி |
– |
மணியணிந்த கிரீடங்களை |
|
மழுவினால் |
– |
கோடாலிப்படையினால் பொடி பொடியாகச்செய்து |
|
பொடிபடுத்து |
– |
(அரசர்களை யெல்லாம் கொன்று.) |
|
உதிரம் குழுவு |
– |
(அவர்களுடைய) ரத்த ஸமூஹமாகிற |
|
வார் புனலுள் |
– |
வெள்ளத்திலே |
|
குளித்து |
– |
ஸ்நாநம்பண்ணி |
|
வெம் கோபம் தவிர்ந்தவன் |
– |
மிக்க கோபம் தணியப் பெற்ற பெருமான்,- |
|
குலை மலி |
– |
குலைகளாலே நிறைந்த |
|
கதலி |
– |
வாழைகளினுடைய |
|
குழுவும் |
– |
தோப்பும் |
|
வார் கமுகும் |
– |
ஓங்கின பாக்குமரங்களும் |
|
குரவும் |
– |
குரவமரங்களும் |
|
நல் பலவும் |
– |
நல்ல பலாமரங்களும் |
|
குளிர்தரு சூதம் |
– |
குளிர்ந்த மாமரங்களும் |
|
மாதவியும் |
– |
குருக்கத்தியுமாகிய |
|
செழுமை ஆர் பொழில்கள் தழுவு |
– |
செழிப்புடைய சோலைகளாலே சூழப்பட்டதும் |
|
நல் மாடம் |
– |
நல்ல மாடமாளிகைகளையுடையதுமான |
|
திருக்கண்ணங்குடியுள், நின்றான்- |
||
|
சூதம், மாதவி |
– |
வடசொற்கள் |
English Translation
In the yore the Lord came on Earth wielding an angry battleaxe and rolled the crowned heads of twenty one kings, then bathed in the river of their gore. His standing form adorns the temple of Tirukkannangudi surrounded by mansions and fertile orchards bearing bunches of bananas, jackfruit, mango, Areca and fragrant kurukatti trees.
