(1754)
வானுளா ரவரை வலிமையால் நலியும் மலிகடல் இலங்கையார் கோனை
பானுசேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிரவில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக் கணமுகில் முரசநின் றதிர
தேனுலா வரிவண் டின்னிசை முரலும் திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
பதவுரை
|
வலிமையால் |
– |
(தனது) மிடுக்கினால் |
|
வானுளாரவரை நலியும் |
– |
தேவர்களை ஹிம்ஸதித்துக் கொண்டிருந்த |
|
மறிகடல் இலங்கை யார் கோனை |
– |
அலைமறியுங் கடல்சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்களுக்கு அரசனான இராவணனுடைய |
|
பரு முடி |
– |
பருத்த தலைகள் |
|
பானு நேர் சரத்தால் |
– |
ஸூர்யனோடொத்த (திக்ஷ்ணமான) அம்புகளாலே |
|
பனங்கனி போல |
– |
பனம்பழம்போல |
|
உதிர |
– |
அற்றுவிழும்படி |
|
வில் விளைத்தோன் |
– |
சார்ங்கத்தை வளைத்த பெருமான் |
|
கான் உலாம் |
– |
காட்டிலே உலாவுகின்ற |
|
மயிலின் கணங்கள் |
– |
மயில் கூட்டங்கள் |
|
நின்று ஆட |
– |
நின்று கூத்தாடவும், |
|
கணம் முகில் |
– |
திரண்ட மேகங்கள் |
|
முரசம் நின்று அதிர |
– |
முரஜவாத்தியம் போல நின்று முழங்கவும், |
|
தேன் உலாம் வரி வண்டு |
– |
தேன்களிலே திரிகின்ற அழகிய வண்டுகள் |
|
இன் இசை முரலும் |
– |
இனிய ராகங்களை ஆலாபிக்கவும் பெற்ற |
|
திருக்கண்ணங்குடியுள், நின்றான்-. |
||
English Translation
The Lord wielded his bow and shot sunray-like arrows on the ocean-surrounded Lanka’s king Ravana, -who was heaping miseries over the gods, -felling his heavy heads like shaking Palm coconuts from a tree. His standing form adorns the temple of Tirukkannangudi surrounded by forests where peacocks in flocks roam and dance, dark clouds play drums, and nectar-drunk bees sink songs.
