(1745)

(1745)

மாணாகி வைய மளந்ததுவும் வாளவுணன்

பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன்

பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும்

காணேன்நான் கண்ண புரத்துறை யம்மானே.

 

பதவுரை

கண்ணபுரத்துறை அம்மானே!- ;

மாண் ஆகி

(முன்பு) வாமநப் பிரமசாரியாகி

வையம்

உலகங்களை

அளந்ததுவும்

அளந்துகொண்டதையும்

வாள் அவுணன்

வாள்கொண்ட இரணியாசுரனுடைய

பூண் ஆகம்

ஆபரணங்களணிந்தமார்பை

கீண்டதுவும்

கிழித்தெறிந்ததையும்

ஈண்டு

இப்போது

நினைத்திருந்தேன்

நான் அநுஸந்திக்கின்றேன்;

பேணாத

ஆத்மோஜ்ஜீவநத்துக்கு ஒரு நன்மையும் செய்து கொள்ளாதவனும்

வல் வினையேன் நான்

வலியபாபங்களையுடையவனுமான நான்

இடர் எத்தனையும்

துளி பாவத்தையும்

காணேன்

(என்னிடத்தில்) காண்கிறேனில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பேணாத தேஹத்திற் காட்டில் வேறுபட்டவனான ஆத்மா ஒருவன் உண்டென்று நினைத்து அவனுக்கு உரிய நன்மைகளை நாடாதவனாயிருந்தவன் நான் என்றபடி.

 

English Translation

O Lord of kannapuram!  I was thinking of how you came as a manikin and measured the Earth, how you tore apart the weaponed Hiranya’s ornamented chest. Lo! This meritless sinner’s sins are nowhere to be seen!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top