(1744)

(1744)

வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல்

துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே

வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்

கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே.

 

பதவுரை

வெள்ளை நீர்

திருப்பாற்கடலினுடைய

வெள்ளத்து

வெள்ளத்திலே

அணைந்த

சேர்ந்த

அரவு அணைமேல்

சேஷசயனத்தின்மேலே

துள்ளு நீர்

சிறுதிவலைகள்

மெள்ள

மெதுவாகவீச

துயின்ற

திருக்கண்வளர்ந்தருள்கின்ற

பெருமானே

ஸ்வாமியே!

வள்ளலே

உதாரனே!

கண்ணபுரத்துறை அம்மானே!- ;

உன் தமர்க்கு

உன் அடியார் விஷயத்தில்

நமன் தமர்

யமபடர்கள்

என்றும்

எக்காலத்திலும்

கள்ளர் போன்ம்

திருடர்போலே மறைந்தொளிப்பர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- யமதூதுர்கள் பாகவதர்களை அணுகமாட்டார்களென்றது கீழ்ப்பாசுரத்தில் அவர்கள் கிட்டாதமாத்திரமேயோ? அவர்கள் கள்ளர்போலே மறைந்தொளிந்து கிடக்கும் படியாயன்றோ உன் பிரபாவமிருப்பது என்கிறார் இப்பாட்டில்.  “சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன் பொறியொற்றி, வைத்த இலச்சினைமாற்றித் தூதுவரோடியொளித்தார்” என்றார் பெரியாழ்வாரும்.

நோவுபட்டுக் கூவுமடியார்களின் கூக்குரல் செவிப்படுவதற்கு அணித்தாகத் திருப்பாற்கடலிலே சிறுதிவலைகள் துடைகுத்தத் திருவனந்தாழ்வான்மீது உறங்குவான்போல் யோகுசெய்யும் பெருமானே! அத்தனை தூரமும் பொறாமல் திருக்கண்ணபுரத்திலே வந்து மிக அணியனாகவுள்ள பெருமானே! நான் யமதூதர்களுக்கு அஞ்சவேண்டிற்றுண்டோ? உனக்கு அடியனாகுமத்தனையே வேண்டுவது; யமபடர்கள் அவ்வளவிலே ஓடியொளிக்கப் பெறுவர்களன்றோ – என்றதாயிற்று.

 

English Translation

O Lord, reclining in the foaming Ocean of Milk on a serpent bed! O Benevolent One! O Lord residing in Kannapuram! Like skulking theives, Yama’s agents always go into hiding before your devotees!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top