(1743)
ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை,
பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது
சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ
காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே.
பதவுரை
|
கண்ணபுரத்துறையம்மானே!- ; |
||
|
உன் |
– |
உன்னுடைய |
|
சே அடி |
– |
திருவடிகளை |
|
ஏத்தி |
– |
துதித்து |
|
எண்ணி இருப்பாரை |
– |
சிந்தித்திருக்குமவர்களை |
|
நமன் தமர் |
– |
யமபடர்கள் |
|
பார்த்து இருந்து |
– |
உயிர்போகுங்காலத்தை எதிர்பார்த்திருந்து |
|
அங்கு |
– |
அந்த சரமஸமயத்தில் |
|
பற்றாது |
– |
வந்து கிட்டமாட்டாமல், |
|
சோத்தம் |
– |
“நமஸ்காரம், |
|
நாம் அஞ்சுவதும் |
– |
நாம் (அணுகுவதற்கும்) அஞ்சுகின்றோம்” |
|
என்று |
– |
என்று சொல்லி |
|
தொடாமை |
– |
தொடுதலும் செய்யாதபடி |
|
நீ காத்தி போன்ம் |
– |
ரக்ஷித்தருளுகிறாயன்றோ. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரானே! நீ என் குற்றங்களைப் பாராதே என்னைக் கைக்கொண்டருள்வது மாத்திரம் போராது; செய்த குற்றங்களை ஆராய்வதற்கென்று நீ நியமித்துள்ள யமன் முதலானாரும் என்னருகுவராதபடி நோக்கியருளவேணுமென்று பிரார்த்தித்தல் இப்பாட்டின் உள்ளுறை.
English Translation
O Lord of kannapuram! Devotees praise and contemplate your lotus feet always; when yama’s agents wait to take them, they close in, but fear to touch and return saluting! Are you not the guardian of their spirits?
