(1743)

(1743)

ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை,

பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது

சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ

காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே.

 

பதவுரை

கண்ணபுரத்துறையம்மானே!- ;

உன்

–

உன்னுடைய

சே அடி

–

திருவடிகளை

ஏத்தி

–

துதித்து

எண்ணி இருப்பாரை

–

சிந்தித்திருக்குமவர்களை

நமன் தமர்

–

யமபடர்கள்

பார்த்து இருந்து

–

உயிர்போகுங்காலத்தை எதிர்பார்த்திருந்து

அங்கு

–

அந்த சரமஸமயத்தில்

பற்றாது

–

வந்து கிட்டமாட்டாமல்,

சோத்தம்

–

“நமஸ்காரம்,

நாம் அஞ்சுவதும்

–

நாம் (அணுகுவதற்கும்) அஞ்சுகின்றோம்”

என்று

–

என்று சொல்லி

தொடாமை

–

தொடுதலும் செய்யாதபடி

நீ காத்தி போன்ம்

–

ரக்ஷித்தருளுகிறாயன்றோ.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிரானே! நீ என் குற்றங்களைப் பாராதே என்னைக் கைக்கொண்டருள்வது மாத்திரம் போராது; செய்த குற்றங்களை ஆராய்வதற்கென்று நீ நியமித்துள்ள யமன் முதலானாரும் என்னருகுவராதபடி நோக்கியருளவேணுமென்று பிரார்த்தித்தல் இப்பாட்டின் உள்ளுறை.

 

English Translation

O Lord of kannapuram! Devotees praise and contemplate your lotus feet always; when yama’s agents wait to take them, they close in, but fear to touch and return saluting!  Are you not the guardian of their spirits?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top