(1722)
தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால்,
முழுநீர் வையம் முன்கொண்டமூவா வுருவி னம்மானை
உழுநீர் வயலுள் பொ ன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்
கழுநீர் மலரும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.
பதவுரை
| தொழும் நீர் |
– |
கண்டவாறே வணங்கவேண்டும் படியான நீர்மையையுடைய |
| வடிவின் |
– |
வடிவு கொண்ட |
| குறள் உரு ஆய் |
– |
வரமந ரூபியாய் |
| வந்து தோன்றி |
– |
அவதரித்து |
| மாவலிபால் |
– |
மஹாபலியினிடத்தில் |
| முன் |
– |
முன்பொருகால் |
| முழுநீர் வையம் |
– |
கடல் சூழ்ந்த வுலகத்தை |
| கொண்ட |
– |
இரந்து பெற்ற |
| மூவா உருவின் |
– |
விகாரமற்ற ரூபத்தையுடையனான |
| அம்மானை |
– |
ஸர்வேச்வரனை, |
| உழு நீர் |
– |
(எப்போதும்) உழுவதையே இயல்வாகவுடைய |
| வயலுள் |
– |
வயல்களிலே |
| பொன் கிளப்ப |
– |
பொன் விளையப் பெற்றதும் |
| ஒருபால் |
– |
வேறு சில இடங்களில் |
| முல்லை |
– |
முல்லைமலர்களும் |
| முகையோடும் |
– |
கருமுகைமலர்களும் |
| கழுநீர் |
– |
செங்கழுநீர்ப்பூக்களும் |
| மலரும் |
– |
மலரப் பெற்றதுமான |
| கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்திலே |
|
அடியேன் கண்டு கொண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மூவாவுருவினம்மானை = இரவும் பகலும் லோகரக்ஷணமே செய்யாநிற்கச் செய்தேயும் ஒன்றுஞ் செய்யாதானைப் போன்று இன்னமும் இளகிவரும் உருவத்தையுடையவன்; ஜகத் ரக்ஷண குதூஹலத்தில் கிழத்தன மடையாதே கீழ்நோக்கிப் பிராயம் புகுமவன் என்க.
திருக்கண்ணபுரத்தின் வயல்வளமும் தோட்டவளமும் பின்னடிகளிற் சொல்லப்படுகின்றன. வயலுள் பொன் விளைவதாகச் சொன்னது உபசாரம்; “இராமழை பெய்த வீர வீரத்துள், பனைநுகங்கொண்டு யானையேர் பூட்டி, வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும், வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே” என்றதிற்போல. பொன்போன்ற நெற்களின் விளைவைச் சொன்னவாறு.
English Translation
Donning the mantle of a venerable Vedic student, the eternal Lord appeared as a manikin and went to Mabali, then took the Earth and oceans from him. I know he is in kannapuram, surrounded by fertile fields and groves where Mullai, Karumugil and Senkolunir flowers blossom profusely.
