(1710)

(1710)

புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை,

மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர்,

முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல்,

கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே.

 

பதவுரை

முயல் துளர்

–

முயற்சிசெய்கிற களைக்கொட்டுகளையுடைய

மிளை

–

சிறுதூறுகளில் நின்றும்

முயல்

–

முயல்களானவை

துள

–

துள்ளவும்,

வளம்

–

செழிப்பாக

விளை

–

விளைகின்ற

வயல்

–

கழனிகளிலே

கயல்

–

கயல்மீன்கள்

துளு

–

துள்ளவும் பெற்ற

கணபுரம்

–

திருக்கண்ணபுரமானது,-

புயல் உறு

–

பெருங்காற்றோடு கூடின

வரை மழை

–

கல் மழை

பொழிதர

–

பொழியுமளவில்

மணி நிரை

–

அழகிய பசுக்கள்

மயல் உற

–

கலங்கி நிற்க (அப்போது)

வரை

–

(கோவர்த்தன) மலையை

குடை

–

குடையாக

எடுவிய

–

எடுத்த

நெடியவர்

–

மஹாபுருஷனான

அடிகள் தம்

–

ஸ்வாமியினுடைய

இடம்

–

திவ்ய தேசமாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- களைபறிக்கிறவர்கள் களைக்கொட்டுகளைக் கொண்டு வியாபரிக்கு மளவிலே சிறுதூறுகளில் நின்றும் புறப்பட்ட முயல்கள் அவர்களது முகத்திலே துள்ளவும், செழிப்பு மிக்க வயல்களிலே உழுகிறவர்கள் முகத்திலே கயல் மீன்கள் துள்ளவும் பெற்ற திருக்கண்ணபுரம் – பண்டு இந்திரன் பசிக் கோபத்தாலே ஏழுநாள் கல்மழை பெய்வித்த காலத்துக் கோ நிரைகள் கலங்கிநிற்க அக்கலக்கந் தீருமாறு கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப்பிடித்த பெருமானுறையுமிடம் என்பதாம்.

 

English Translation

The Lord who lifted a mountain and protected the swooning cows against a hailstorm resides in kannapuram amid hills where the harvesters sickle brings out rabbits from their burrows and fertile fields where kayal-fish dance enchanted.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top