(1685)
நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில்,
சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர்
காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல்,
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ.
பதவுரை
|
கோல் தும்பீ!- |
||
|
நெடு நீர் |
– |
அதிகமான ஜலத்தையுடைய |
|
வயல் |
– |
வயல்களிலுண்டான |
|
நீலம் மலர்கள் |
– |
நீலோற்பல மலர்களிலும் |
|
மருங்கில் |
– |
சுற்றிலுமுள்ள |
|
மலர் எல்லாம் |
– |
எல்லா மலர்களிலும் |
|
சால |
– |
மிகவும் |
|
ஊதாதே |
– |
ஒலிசெய்வது தவிர்த்து |
|
வாள் அரக்கர் காலன் |
– |
வாட்படையையுடைய ராக்ஷஸர்களுக்கு மிருத்யுவான |
|
கண்ணபுரத்தெம்பெருமானுடைய-; |
||
|
கதிர் முடி மேல் |
– |
ஒளி பொருந்திய திருமுடி மீதுள்ள |
|
கோலம் |
– |
அழகிய |
|
நறு |
– |
பரிமளம் மிக்க |
|
துழாய் |
– |
திருத்துழாயை |
|
கொண்டு ஊதாய்-. |
||
English Translation
O Dragon-fly! Do not hover over the blue water lilies and the profuse flowers growing by if in the lakes, Go now to Tirukkannapuram, -He is the destroyer of mighty Rakshasas, -come back and blow over me the gragrance of his Tulasi wreath.
