(1681)
நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,
சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி,
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான்,
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.
பதவுரை
|
கோல் தும்பீ- |
||
|
நீர்மலிகின்றது |
– |
ஸமுத்ரத்திலே வியாபித்த |
|
ஓர் மீன் ஆய் |
– |
அத்விதீயமான மத்ஸ்யாவதாரமெடுத்தவனும் |
|
ஓர் ஆமையும் ஆய் |
– |
விலக்ஷணமான கூர்மாவதார மெடுத்தவனும் |
|
சீர் மலிகின்றது ஓர் சிங்கம் உரு ஆகி |
– |
சீர்மை மிகுந்த நரஸிம்ஹாவதார மெடுத்தவனும் |
|
கார் மலி வண்ணன் |
– |
மேகத்திற்காட்டிலும் சிறந்த வடிவு பெற்றவனுமான |
|
கண்ணபுரத் தெம்பெருமானுடைய-; |
||
|
தார் |
– |
மாலையிலே |
|
மலி |
– |
பொருந்திய |
|
தண் |
– |
குளிர்ந்த |
|
துழாய் |
– |
திருத்துழாயிலே |
|
தாழ்ந்து |
– |
தாமதித்திருந்து |
|
ஊதாய் |
– |
(வந்து) ஊது. |
English Translation
O Dragon-fly! Go now to Lord of Tirukkannapuram, -He is the beautiful one who came as a fish in the deluge, as a furtile in the sea, and a man-lion in the yore, -come back and blow over me the fragrance of his Tulasi wreath.
