(1677)
தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்
வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன்,
காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை,
நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே.
பதவுரை
|
தே மருவு |
– |
தேன் பொருந்திய |
|
பொழில் |
– |
சோலைகளினால் |
|
புடை சூழ் |
– |
நாற்புறமுஞ் சூழப்பட்ட |
|
திருக்கண்ணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்தில் |
|
உறையும் |
– |
நித்யவாஸம் பண்ணுகிற |
|
வாமனனை |
– |
வாமநாவதாரம் செய்தருளின பெருமானைக் குறித்து, |
|
மறி கடல் சூழ் |
– |
அலை மடிகின்ற கடலாலே சூழப்பட்டு |
|
வயல் வளம் |
– |
வயல் வளங்களையு முடைத்தான |
|
ஆலி நாடன் |
– |
திருவாலிநாட்டுக்குத் தலைவரும் |
|
காமரு சீர் |
– |
விரும்பத்தக்க குணங்களையுடையவருமான |
|
கலிகன்றி |
– |
திருமங்கையாழ்வார் |
|
கண்டு உரைத்த |
– |
ஆராய்ந்து அருளிச்செய்த |
|
தமிழ் மாலை இவை |
– |
இத்தமிழ்ப் பாசுரங்களை |
|
நாமருவி |
– |
நாவிலே பொருந்தவைத்து |
|
பாட |
– |
பாடுமளவிலே |
|
வினை ஆய |
– |
பாபமென்று உள்ளவை யெல்லாம் |
|
நண்ணா |
– |
கிட்டாதே ஒழிந்துபோம் |
.
English Translation
This garland of sweet Tamil songs by adorable kalikanri, kink of the fertile fields-surrounded Tiruvali, sings of the bridegroom of Tirukkannapuram surrounded by nector-dripping graves. Those who master it will be freed of karmas.
