(1676)
வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை,
சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும்,
பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல்
பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே.
பதவுரை
|
வார் ஆளும் இளகொங்கை |
– |
கச்சினால் தாங்கப்படுகின்ற இள முலைகளையுடையளாய் |
|
நெடு பணை தோள் |
– |
நீண்ட மூங்கில் போன்ற தோள் களையுடையளாய் |
|
மடம் |
– |
ஆத்மகுணங்களால் நிறைந்தவளாய் |
|
பாவை |
– |
பதுமை போன்றவளான பெரிய பிராட்டியார் (நித்யவாஸம் பண்ணப் பெறுகையினாலே) |
|
சீர் ஆளும் |
– |
சீர்மையை யுடைத்தான |
|
வரை |
– |
மலைபோன்ற |
|
மார்பன் |
– |
திருமார்பையுடையவனும் |
|
திருக்கண்ணபுரத்து, உறையும்-; |
||
|
பேர் ஆளன் |
– |
பெருமை பொருந்தியவனும் |
|
ஆயிரம் பேர் |
– |
ஆயிரந்திருநாமங்களை யுடையவனும் |
|
ஆயிரம் வாய் |
– |
ஆயிரம் முகங்களையுடைய |
|
அரவு |
– |
ஆதிசேஷனாகிற |
|
அணை மேல் |
– |
படுக்கையின் மீது பள்ளி கொண்டிருப்பவனுமான |
|
பேராளர் பெருமானுக்கு |
– |
தேவாதி தேவனுக்கு |
|
என் பெய் வளை இழந்தேன்-. |
||
|
பெய்வளை |
– |
அணிந்துக்கொண்டிருந்தவளை. |
|
பேராளர் பெருமான் பேராளரென்று மஹான்களுக்குப் பெயர்; அவர்கட்கும் மஹான் என்றபடி. |
||
English Translation
The well corsetted tender-breasted Bamboo-like-arms-lady of the Lakshmi, resides on the mountain-like chest of the Lord in Tirukkannapuram, He is the Lord with a thousand names, reclining on a serpent of a thousand hoods. Alas, I have lost my beautiful golden bangles to him.
