(1654)

(1654)

செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச் சென்கின் றாளால்,

அவ்வரத்த வடியிணையு மங்கைகளும் பங்கயமே என்கின் றாளால்,

மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ என்கின் றாளால்,

கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.

 

பதவுரை

செம் வரத்த உடை ஆடை

–

சிவந்ததாய்ச் சிறந்ததாக உடுக்கப்பட்ட பீதாம்பரம் (என்றும்)

அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாள்

–

அந்தப் பீதாம்பரத்தின் மேல் ஒப்பற்ற சிவளிகைகச்சு (சாத்தப்பட்டிருக்கிறது) என்றும் சொல்லுகிறாள்;

அவ் வரத்த அடி இணையும்

–

அப்படிப்பட்ட சிறந்த உபயபாதங்களும்

அம் கைகளும்

–

அழகிய திருக்கைகளும்

பங்கயமே என்கின்றாள்

–

தாமரைப்பூவே என்று சொல்லுகிறாள்;

மை வளர்க்கும் மணி உருவம்

–

நீலநிறத்தை மிகுதியாகத் தோற்றுவிக்கின்ற நீலமணி போன்ற திருமேனி

மரதகமோ

–

மரதகமணியோ,

(அன்றி,)

மழை முகிலோ

–

காளமேகமோ

என்கின்றாள் ஆல் – ;

கை வளர்க்கும் அழல் ஆளர்

–

தமது கைகளால் ஓம்பப்படுகின்ற அக்நியையுடைய வரான அந்தணர் வாழ்கிற

கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ-

 

English Translation

“He wears a red coloured vesture on his frame and a golden cummerbund over it”, she says, then, “Oh, the feet are of the same hue, even his lotus hands are of that hue”.  “The dark due of his gem-like frame, -is it emerald, or is it rain cloud?”, she cries, I wonder of she has seen the Lord of kannapuram where Vedic seers offer fire oblations, Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top