(1654)
செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் சிவளிகைக்கச் சென்கின் றாளால்,
அவ்வரத்த வடியிணையு மங்கைகளும் பங்கயமே என்கின் றாளால்,
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ மழைமுகிலோ என்கின் றாளால்,
கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் தம்மானைக் கண்டாள் கொல்லோ.
பதவுரை
|
செம் வரத்த உடை ஆடை |
– |
சிவந்ததாய்ச் சிறந்ததாக உடுக்கப்பட்ட பீதாம்பரம் (என்றும்) |
|
அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாள் |
– |
அந்தப் பீதாம்பரத்தின் மேல் ஒப்பற்ற சிவளிகைகச்சு (சாத்தப்பட்டிருக்கிறது) என்றும் சொல்லுகிறாள்; |
|
அவ் வரத்த அடி இணையும் |
– |
அப்படிப்பட்ட சிறந்த உபயபாதங்களும் |
|
அம் கைகளும் |
– |
அழகிய திருக்கைகளும் |
|
பங்கயமே என்கின்றாள் |
– |
தாமரைப்பூவே என்று சொல்லுகிறாள்; |
|
மை வளர்க்கும் மணி உருவம் |
– |
நீலநிறத்தை மிகுதியாகத் தோற்றுவிக்கின்ற நீலமணி போன்ற திருமேனி |
|
மரதகமோ |
– |
மரதகமணியோ, |
|
(அன்றி,) |
||
|
மழை முகிலோ |
– |
காளமேகமோ |
|
என்கின்றாள் ஆல் – ; |
||
|
கை வளர்க்கும் அழல் ஆளர் |
– |
தமது கைகளால் ஓம்பப்படுகின்ற அக்நியையுடைய வரான அந்தணர் வாழ்கிற |
|
கண்ணபுரத்து அம்மானை கண்டாள் கொலோ- |
||
English Translation
“He wears a red coloured vesture on his frame and a golden cummerbund over it”, she says, then, “Oh, the feet are of the same hue, even his lotus hands are of that hue”. “The dark due of his gem-like frame, -is it emerald, or is it rain cloud?”, she cries, I wonder of she has seen the Lord of kannapuram where Vedic seers offer fire oblations, Alas!
